HOME»NEWS»SPORTS»pv sindhu mother explains about her retirement skd

பி.வி.சிந்து ஓய்வு பெறவில்லை: ட்வீட் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது- சிந்துவின் தாய் விளக்கம்

பி.வி.சிந்துவின் ட்வீட் தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அவர், பேட்மின்டன் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவில்லை என்று அவரது தாயார் விஜயா நியூஸ்18 தொலைக்காட்சிக்கு விளக்கம் அளித்துள்ளார்.

பி.வி.சிந்து ஓய்வு பெறவில்லை: ட்வீட் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது- சிந்துவின் தாய் விளக்கம்
பி.வி.சிந்து
  • Share this:

இந்திய அணிக்காக பேட்மின்டன் போட்டிகளில் சர்வதேச அளவில் விளையாடிவருபவர் பி.வி.சிந்து. உலக அளவில் மிகப் பிரபலமான பி.வி.சிந்து சர்வதேச அளவில் பெண்கள் பிரிவில் சில வருடங்களுக்கு முன் முதலிடத்தைக் கூட பிடித்திருந்தார். தற்போது, சர்வதேச அளவில் அவர் முதலிடத்தில் இருந்துவருகிறார். இந்தநிலையில், கொரோனாவை மையப்படுத்தி retire என்ற வார்த்தையைப் பயன்படுத்தி அவர் பதிவிட்டிருந்த ட்வீட் தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டு வைரலானது. அவர், சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவித்துவிட்டார் என்று செய்திகள் வெளியாகின. இந்தநிலையில், நியூஸ்18 தொலைக்காட்சிக்கு விளக்கமளித்துள்ள அவருடைய தாயார் விஜயா, ‘பி.வி.சிந்துவின் ட்வீட்டை ஊடகங்கள் முழுமையாக படிக்காமல் அவர், போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக செய்திகளை வெளியிட்டுவிட்டன. அவர், தொடர்ந்து சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவார். வரவுள்ள ஒலிம்பிக் போட்டிகளிலும் பி.வி.சிந்து விளையாடுவார் என்று விளக்கம் அளித்தார்.

பி.வி.சிந்துவின் ட்வீட்டில், ‘டென்மார்க் ஓபன் தொடர்தான் என்னுடைய கடைசி போட்டி. நான் ஓய்வு பெறுகிறேன். இப்போதிலிருந்து தெளிவான உணர்வுடன் வருவது குறித்து நான் சிந்தித்துவருகிறேன். அதனைக் கையாள்வது குறித்து நான் தடுமாறுகிறேன் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். உங்களுக்குத் தெரியும், இது தவறாக உணரப்படுகிறது. அதனால், தான் நான் இதை எழுதுகிறேன், நான் அதை செய்து முடித்துவிட்டேன் என்று. நீங்கள் அதிர்ச்சியடைந்தாலோ அல்லது குழப்பமடைந்தாலோ அது புரிந்துகொள்ளக்கூடியதுதான். ஆனால், இதனை நீங்கள் முழுமையாக வாசித்து முடிக்கும்போது என்னுடைய பார்வையை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். அதனை நீங்கள் ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இந்த கொரோனா பெருந்தொற்று என் கண்ணைத் திறந்துள்ளது. ஆட்டத்தின் இறுதிவரை வலிமையான எதிராளியுடன் சண்டையிடுவதற்காக நான் கடுமையாக முயற்சி எடுத்துள்ளேன். அதனை நான் முன்பு பலமுறை செய்துள்ளேன். என்னால் அதனை மறுபடியும் செய்யமுடியும். ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டிப்படைக்கும் கண்ணுக்குத் தெரியாத வைரஸை நான் எப்படி வீழ்த்த முடியும்? வீட்டிலேயே இருந்து மாதங்களாகிவிட்டன. இன்னமும் வெளியே செல்லும்போது நமக்குள் கேள்வி எழுகிறது. தற்போதுள்ள ஓய்வற்ற மனநிலையிலிருந்து ஓய்வு பெறுவதற்கு நான் முடிவு செய்துவிட்டேன். இந்த எதிர்மறை எண்ணம், தொடர்ச்சியான அச்சத்திலிருந்து ஓய்வுபெறுவதற்கு முடிவு செய்துவிட்டேன்.

முக்கியமாக தரமற்றதிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முடிவு செய்துவிட்டேன். நாம் இதிலிருந்து விலகிவிட முடியாது. நாம் அதற்கு தயாராக இருக்கவேண்டும். நாம் இணைந்து இந்த வைரஸை வீழ்த்தவேண்டும். நாம் இன்று முடிவு செய்யும் வாய்ப்புகள்தான் நம்முடைய வருங்காலத்தை வரையறுக்கும். அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தை வரையறுக்கும். அவர்களை கீழேவிழ அனுமதிக்க முடியாது. சுரங்கப்பாதையின் இறுதியில் ஒளிரும் வெளிச்சத்தை நாம் நம்ப வேண்டும். ஆமாம், டென்மார்க் ஓபன் தொடர் நடைபெறவில்லை. ஆனால், அது நான் பயிற்சி எடுப்பதிலிருந்து என்னை தடை செய்யாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Published by:Karthick S
First published: