முகப்பு /செய்தி /விளையாட்டு / #AllEnglandOpen: முதல் சுற்றிலேயே பி.வி. சிந்து அதிர்ச்சி தோல்வி!

#AllEnglandOpen: முதல் சுற்றிலேயே பி.வி. சிந்து அதிர்ச்சி தோல்வி!

பிவி சிந்து

பிவி சிந்து

PV Sindhu Bows out After First Round Defeat in All England Championship | இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் நேற்று தொடங்கி வரும் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற இந்தியாவின் முன்னணி வீராங்கனை பிவி சிந்து முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் நேற்று தொடங்கி வரும் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்றவரும், உலகத் தரவரிசையில் 6-வது இடத்தில் இருப்பவருமான இந்தியாவின் பிவி சிந்து, தனது முதல் போட்டியில் 4-வது இடத்தில் உள்ள தென்கொரியாவின் சுங் ஜி ஹியூன் உடன் மோதினார்.

Sung Ji Hyun, சுங் ஜி ஹியூன்
தென்கொரிய வீராங்கனை சுங் ஜி ஹியூன். (Twitter)

முதல் செட்டில் சுங் ஜி ஹியூன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த, சிந்து 16-21 என அந்த செட்டை இழந்தார். 2-வது செட்டில் சுதாரித்துக்கொண்ட சிந்து ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடும் போராட்டத்திற்குப்பின் 2-வது செட்டை சிந்து 22-20 என போராடி கைப்பற்றினார்.

வெற்றியை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி செட்டில் சிந்து அடித்த சில தவறான ஷாட்களால் புள்ளிகளை இழந்தார். அந்த செட்டை 18-21 என இழந்த அவர் முதல் சுற்றோடு தொடரில் இருந்து வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.

VIDEO: வீரர்களை தனது விலையுயர்ந்த காரில் அழைத்துச் சென்ற தோனி!

கடைசி ஓவர் வீசுவதைவிட ஹிந்தி பேசுவதுதான் கடினம் - விஜய் சங்கர் ஓபன் டாக்!

Also Watch...

First published:

Tags: Badminton, PV Sindhu