ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Happy Birthday PV Sindhu: சர்வதேச பேட்மிண்டன் அரங்கில் பி.வி.சிந்து நிகழ்த்தியுள்ள சாதனைகள்!

Happy Birthday PV Sindhu: சர்வதேச பேட்மிண்டன் அரங்கில் பி.வி.சிந்து நிகழ்த்தியுள்ள சாதனைகள்!

பி.வி.சிந்து

பி.வி.சிந்து

இந்திய தொழில்முறை பேட்மிண்டன் வீராங்கனையாக இருந்து வரும் சிந்து, தனது தொழில் வாழ்க்கையில் ஒலிம்பிக் உள்ளிட்ட பல போட்டிகளிலும், 2019 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஒரு தங்கம் உட்பட BWF சர்க்யூட்டிலும் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

நாட்டின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையாக திகழ்ந்து வரும் சிந்து, சர்வதேச அளவில் தலைசிறந்த பேட்மிண்டன் வீராங்கனைகளில் ஒருவராகவும் இருந்து வருகிறார். எதிர்வரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் டீம் இந்தியாவின் பேட்மிண்டன் அணியை வழிநடத்த உள்ளார் பி.வி.சிந்து. அற்புதமான சாதனைகள் மற்றும் திறமை கொண்டவரான இவர் இந்திய விளையாட்டு துறையில் தவிர்க்க முடியாத வீராங்கனையாக திகழ்ந்து வருகிறார். இந்தியாவில் பேட்மிண்டன் விளையாட்டை பொறுத்தவரை சிந்து இதய துடிப்பாக இருந்து வருவதால் வரவிருக்கும் டோக்கியோ கோடைகால ஒலிம்பிக்கில் பங்கேற்று தங்கப்பதக்கத்துடன் தான் நாடு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இப்படிப்பட்ட எதிர்பார்ப்பை தன் மீது ஏற்படுத்தி உள்ள பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இன்று தனது 26-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். புசார்லா வெங்கட சிந்து என்பதனை சுருக்கி பி.வி.சிந்து என்றழைக்கப்பட்டு வருகிறார். இந்திய தொழில்முறை பேட்மிண்டன் வீராங்கனையாக இருந்து வரும் சிந்து, தனது தொழில் வாழ்க்கையில் ஒலிம்பிக் உள்ளிட்ட பல போட்டிகளிலும், 2019 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஒரு தங்கம் உட்பட BWF சர்க்யூட்டிலும் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.பி. வி. ரமணா மற்றும் பி.விஜயா தம்பதியருக்கு 1995-ம் ஆண்டு ஜூலை மாதம் 5-ம் தேதி மகளாக பிறந்தார் பி.வி.சிந்து.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவரின் தந்தை கைபந்து வீரர் மற்றும் அர்ஜுனா விருதை வென்றவராவார். செப்டம்பர் 2012-ல், தனது 17-வது வயதில், Badminton World Federation-ன் உலக தரவரிசை பட்டியலில் முதல் 20 இடங்களைப் பிடித்த போது உலகளாவிய கவனத்தை முதன் முதலில் பெற்றார் சிந்து. தவிர இவரது தொழில் வாழ்க்கையின் பெரும் பகுதியில் 10 இடங்களிலேயே இருக்கிறார். பி.வி.சிந்து இன்று தனது 26-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நேரத்தில் உலகரங்கில் அவர் பெற்ற முக்கிய வெற்றிகளை பார்ப்போம்:

2013 மலேசியன் ஓபன் டைட்டில்:

2013-ல் நடைபெற்ற மலேசிய ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் பேட்மிண்டன் சீரிஸில் மிக சிறப்பாக விளையாடி தனது முதல் கிராண்ட் பிரிக்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். உலகின் சிறந்த வீரர்கள் பலர் பங்கேற்ற இந்த தொடரில் தனது அசாத்திய திறமையால் தங்கப்பதக்கத்தை வென்று பெரும் சாதனை படைத்தார் சிந்து.

2013 குவாங்சோ உலக சாம்பியன்ஷிப்:

இந்த போட்டியில் வெண்கலப்பதக்கத்தை வென்றதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் ஒற்றையர் பதக்கத்தை கைப்பற்றிய முதல் இந்திய ஷட்லராக வரலாறு படைத்தார் சிந்து. 2012 ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற வாங் யிஹானை குவாங்சோவில் நடந்த BWF உலக சாம்பியன்ஷிப்பில் தோற்கடித்தன் மூலம் வெண்கலப் பதக்கத்தை வென்றார் சிந்து.

2015 டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ்:

2015-ம் ஆண்டு நடைபெற்ற இந்த தொடரின் காலிறுதியில் வாங் யிஹானையும், கரோலினா மரினை அரையிறுதியிலும் தோற்கடித்து இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தார் பி.வி.சிந்து. இறுதி போட்டியில் லி ஜுருயிடம் தோற்றத்தை அடுத்து வெள்ளி பதக்கம் வென்றார்.

Also read... Tokyo Olympics | கொரோனா பீதி: ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்யுங்கள்- ஜப்பானியர்கள் வலியுறுத்தல்

2016 ரியோ ஒலிம்பிக்:

பேட்மிண்டன் வாழ்வில் சிந்து அடைந்த உச்சம் இந்திய பேட்மிண்டன் வரலாற்றின் உச்சமாக மாறியது. ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இவரது அசாதாரண திறமை சர்வதேச அளவில் அவருக்கு ஒரு புதிய அந்தஸ்தை பெற்றுத் தந்தது. இறுதி போட்டியில் சிந்து தோற்றாலும் 116 ஆண்டு கால ஒலிம்பிக் பேட்மிண்டன் வரலாற்றில், இந்தியாவை சேர்ந்த ஒருவர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது அதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

2019 BWF உலக சாம்பியன்ஷிப்:

2019-ல் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்ற சிந்து இறுதி போட்டியில் ஜப்பானின் நோசோமி ஒகுஹாராவை வெறும் 36 நிமிடங்களில் 21-7, 21-7 என்ற செட் கணக்கில் மிக எளிதாக வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்று, BWF உலக சாம்பியன்ஷிப்பை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார் பி.வி.சிந்து.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: P.V.Sindhu