உலகக்கோப்பை போட்டியில் சூதாட்டம்? முன்னாள் கேப்டன் சங்ககாராவிடம் 8 மணிநேரம் விசாரணை..

சங்கக்கார

2011-இல் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக எழுந்த புகாரில், இலங்கை முன்னாள் கேப்டன் குமாரா சங்ககாராவிடம் 8 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.

 • Share this:
  2011-இல் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக எழுந்த புகாரில், இலங்கை முன்னாள் கேப்டன் குமாரா சங்ககாராவிடம் 8 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.

  உலகக்கோப்பை இறுதி போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் மஹிந்தானதா அலுத்கமகே தெரிவித்த குற்றச்சாட்டு சர்ச்சையாக வெடித்தது.

  இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ள இலங்கை சிறப்பு புலனாய்வு பிரிவினர் முன், இலங்கை அணியின் தேர்வு குழு தலைவராக இருந்த அரவிந்த டி சில்வா, தொடக்க ஆட்டக்காரராக இருந்த உபுல் தரங்கா ஆகியோர் ஏற்கனவே ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

  Also read... ஏக்-தோ-தீன், ஹவா-ஹவா போன்ற புகழ்பெற்ற நடனங்கள் நினைவிருக்கிறதா? பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் மாரடைப்பால் காலமானார்

  தற்போது முன்னாள் கேட்பன் சங்ககாராவும் ஆஜராகியுள்ளார். அவரிடம் 8 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.

  Continuous harassment of @KumarSanga2 and our 2011 cricket heroes must be strongly opposed. Government behavior is deplorable.

  — Sajith Premadasa (@sajithpremadasa) July 2, 2020

  இதனிடையே விசாரணை அலுவலகத்திற்கு முன்பாக விசாரணைக்கு எதிராக சங்ககாராவின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  Published by:Vinothini Aandisamy
  First published: