முகப்பு /செய்தி /விளையாட்டு / புரோ கபடி: பாட்னாவை சமாளிக்குமா தமிழ் தலைவாஸ்?

புரோ கபடி: பாட்னாவை சமாளிக்குமா தமிழ் தலைவாஸ்?

எதிரணி வீரரை தொடும் தமிழ் தலைவாஸின் அஜய் (Twitter/ProKabbadi) தாகூர்

எதிரணி வீரரை தொடும் தமிழ் தலைவாஸின் அஜய் (Twitter/ProKabbadi) தாகூர்

Pro Kabaddi Tamil Thalaivas Vs Patna Pirates Preview | நடப்பு சீசனின் தொடக்க ஆட்டத்தில் பாட்னாவை வீழ்த்தியதுபோல் இந்த முறையும் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெறும் முனைப்புடன் உள்ளது.

  • Last Updated :

புரோ கபடி லீக் தொடரில் தெலுகு டைட்டன்ஸ் அணியை 4 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழ் தலைவாஸ் அணி, இன்று நடப்பு சாம்பியன் பாட்னாவை எதிர்கொள்கிறது.

6-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில், அகமதாபாத்தில் நடைபெற்ற 72-வது லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ் தலைவாஸ் அணி, தெலுகு டைட்டன்ஸ் அணி உடன் பலப்பரீட்சை நடத்தியது. மிகவும் பரபரப்பாக இருந்த இந்த போட்டியில் 4 புள்ளிகள் வித்தியாசத்தில் 27-23 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது. இதன்மூலம், நடப்பு சீசனில் நீண்ட இடைவெளிக்குப்பின் 4-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

tamil thalaivas
எதிரணி வீரரை பிடிக்க முயலும் தமிழ் தலைவாஸ் வீரர்கள் (Twitter/ProKabbadi)

இந்த போட்டியில், அதிகபட்சமாக தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாக்கூர் 8 புள்ளிகளும், சுகேஷ் ஹெட்ஜ் 5 புள்ளிகளும் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.

மீண்டும் பாட்னாவை எதிர்கொள்ளும் தமிழ் தலைவாஸ்

தமிழ் தலைவாஸ் அணி, இன்று தனது 13-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பாட்னா பைரேட்சை இன்று இரவு 8 மணிக்கு எதிர்கொள்கிறது. பாட்னாவை வீழ்த்தி 5-வது வெற்றியை தமிழ் தலைவாஸ் பெறுமா? என்று தமிழக ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். முன்னதாக, சென்னையில் நடைபெற்ற நடப்பு சீசனின் தொடக்க ஆட்டத்தில் 42-26 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி பாட்னாவை தமிழ் தலைவாஸ் வீழ்த்தியிருந்தது.

Tamil Thalaivas, Pro Kabaddi 2018
பயிற்சியாளருடன் (வலது) வீரர்கள் (Twitter/TamilThalaivas)

தமிழ் தலைவாஸ் அணி, 4 வெற்றி, 7 தோல்வியுடன் 25 புள்ளிகளுடன் ‘பி’ பிரிவில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் அதே இடத்தில் தான் இருக்கும். பாட்னா பைரேட்ஸ் அணி, 6 வெற்றி, 6 தோல்வியுடன் 33 புள்ளிகளுடன் அதே பிரிவில் 2-வது இடத்தில் உள்ளது.

Also See...

top videos

    First published:

    Tags: Pro Kabaddi League 2018, Tamil Thalaivas