முகப்பு /செய்தி /விளையாட்டு / புரோ கபடி : தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி கெத்து காட்டிய தமிழ் தலைவாஸ்!

புரோ கபடி : தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி கெத்து காட்டிய தமிழ் தலைவாஸ்!

தமிழ் தலைவாஸ் vs தெலுங்கு டைட்டன்ஸ்

தமிழ் தலைவாஸ் vs தெலுங்கு டைட்டன்ஸ்

  • Last Updated :

புரோ கபடி லீக் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் அணி வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

7-வது புரோ கபடி லீக் தொடர் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். நேற்று நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.

போட்டி தொடங்கிய 10 நிமிடங்களில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை குவித்தது. பின் வேகம் எடுத்த தமிழ் தலைவாஸ் அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியினரை புரட்டி எடுத்தனர். போட்டியில் முதல் பாதியில் தெலுங்கு அணியை ஆல்-அவுட் செய்து தமிழ் தலைவாஸ் அணி வலுவான நிலையில் இருந்தது.

பிற்பாதியிலும் தமிழ் தலைவாஸ் அணியின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. போட்டியின் 2வது பாதியிலும் தெலுங்கு அணியை ஆல்-அவுட் செய்து தமிழ் தலைவாஸ் அணி 39-26 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு அணியை தோற்கடித்து வெற்றியுடன் கணக்கை ஆரம்பித்துள்ளது தமிழ் தலைவாஸ் அணி. தெலுங்கு அணிக்கு இது 2வது தோல்வியாகும்.

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில் யு மும்பா- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 8.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் புனே ரி பால்டன்- அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Also Watch

top videos

    First published:

    Tags: Pro Kabaddi League tournament