முகப்பு /செய்தி /விளையாட்டு / விவோ ப்ரோ கபடி சீசன் 8 : எப்போது தொடங்குகிறது, எதில் பார்க்கலாம்? முழு விபரம்

விவோ ப்ரோ கபடி சீசன் 8 : எப்போது தொடங்குகிறது, எதில் பார்க்கலாம்? முழு விபரம்

கொரோனா பாதுகாப்பு காரணமாக பார்வையாளர்கள் யாருக்கும் நேரில் பார்ப்பதற்கு அனுமதியில்லை. ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த அணிகளை தங்கள் வீட்டின் வசதியிலிருந்து மட்டுமே சப்போர்ட் செய்ய முடியும்.

கொரோனா பாதுகாப்பு காரணமாக பார்வையாளர்கள் யாருக்கும் நேரில் பார்ப்பதற்கு அனுமதியில்லை. ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த அணிகளை தங்கள் வீட்டின் வசதியிலிருந்து மட்டுமே சப்போர்ட் செய்ய முடியும்.

கொரோனா பாதுகாப்பு காரணமாக பார்வையாளர்கள் யாருக்கும் நேரில் பார்ப்பதற்கு அனுமதியில்லை. ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த அணிகளை தங்கள் வீட்டின் வசதியிலிருந்து மட்டுமே சப்போர்ட் செய்ய முடியும்.

  • Last Updated :

கபடி ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ப்ரோ கபடி சீசன் 8 அடுத்த மாதம் தொடங்குகிறது. இதையொட்டி முன்னேற்பு நடவடிக்கைகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கவனித்து வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு முழுமையாக நீங்காததால் மிகுந்த எச்சரிக்கையுடன் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. இதுதொடர்பாக விளையாட்டு வீரர்கள் மற்றும் பணியாளர்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்படுவதை மஷால் ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம் மேற்கொள்கிறது.

போட்டிகள் முடியும் வரை முழு பாதுகாப்பிற்கும், தேவையான சுகாதாரத்தைப் பேணுவதற்காகவும் சிறப்பு ஏஜென்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சீசன் முழுவதும் பயோ பப்புள் பராமரிக்கப்படும் என்று ப்ரோ கபடி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விவோ ப்ரோ கபடி சீசன் 8 டிசம்பர் 22, 2021 முதல் தொடங்கும் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டால் லைவாக பார்த்து மகிழலாம்.

முன்பைப் போல வெவ்வேறு நகரங்களில் போட்டி நடத்துவது தவிர்க்கப்பட்டு, சீசன் 8-ன் அனைத்து போட்டிகளையும் நடத்தும் நகரமாக பெங்களூரு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த ப்ரோ கபடி லீக் நிர்வாகி அனுபம் கோஸ்வாமி கூறுகையில் "விவோ புரோ கபடி லீக்கின் சீசன் 8 கர்நாடகாவில் நடத்தப்பவதை மகிழ்ச்சியாக உணர்கிறோம். இந்தியாவில் கபடி ரசிகர்களுக்கு கர்நாடக மாநிலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பெங்களூருவில் கபடிப் போட்டிகளுக்கு தேவையான தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன. சிறந்த பாதுகாப்பு நடைமுறைகளுடன் மிகப்பெரிய லீக்கான ப்ரோ கபடி போட்டிகளை நடத்துவதை எதிர்நோக்கியுள்ளோம்'' என்றார்.

ப்ரோ கபடி குறித்த அறிவிப்பு வெளிவந்தாலும், அதனை ரசிகர்கள் நேரில் பார்த்து ரசிக்க முடியாது என்பது அதிருப்தி அடைய செய்துள்ளது.கொரோனா பாதுகாப்பு காரணமாக பார்வையாளர்கள் யாருக்கும் நேரில் பார்ப்பதற்கு அனுமதியில்லை. ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த அணிகளை தங்கள் வீட்டின் வசதியிலிருந்து மட்டுமே சப்போர்ட் செய்ய முடியும்.

top videos

    ப்ரோ கபடி போட்டிகள் தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எந்தெந்தத அணிகள் எப்போது மோதும் என்கிற விபரம் விரைவில் வெளியாகவுள்ளது.

    First published:

    Tags: Kabaddi, Pro Kabaddi