முகப்பு /செய்தி /விளையாட்டு / புரோ கபடி 2021 : கைக்கு வந்த வெற்றியை கடைசி நேரத்தில் பறிகொடுத்த தமிழ் தலைவாஸ்.. போராடி டிரா செய்த தெலுங்கு டைட்டன்ஸ்

புரோ கபடி 2021 : கைக்கு வந்த வெற்றியை கடைசி நேரத்தில் பறிகொடுத்த தமிழ் தலைவாஸ்.. போராடி டிரா செய்த தெலுங்கு டைட்டன்ஸ்

புரோ கபடி 2021

புரோ கபடி 2021

புரோ கபடி லீக் தொடரில் தெலுங்கு டைட்டன்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி டிராவில் முடிவடைந்தது.

  • Last Updated :

புரோ கபடி 2021 தொடரின் லீக் போட்டிகள் இன்று தொடங்கியது. முதல் நாளில் 3 லீக் போட்டிகள் நடைபெறுகிறது. முதல் லீக் போட்டியில் மும்பை - பெங்களூரு அணிகள் மோதின. பெங்களூருவில் நடைபெற்ற இந்த லீக் போட்டியில் மும்பையின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. மும்பை அணி வீரர்கள் சிறப்பாக விளையாடியதால் அந்த 46 - 30 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இதையடுத்து 2-வது லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் ஆக்ரேஷமாக விளையாடி வந்தனர். ஆரம்பத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் முன்னணி பெற்றாலும் சுதாரித்து கொண்ட தமிழ் தலைவாஸ் அணி சீறி பாய்ந்து புள்ளிகளை அள்ளியது.

இதனால் போட்டியின் முடிவில் தமிழ் தலைவாஸ் அணியின் வெற்றி வாய்ப்பு 38 -32 என பிரகாசமாக இருந்தது. ஆனால் கடைசி சில நிமிடங்களில் ஆட்டத்தின் போக்கையே தெலுங்கு டைட்டன்ஸ் மாற்றியது. ஒரே ரெய்டில் 3 புள்ளிகளை எடுத்தும் அடுத்தடுத்து புள்ளிகளை பெற்று தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிரான போட்டியை டிராவில் முடித்தது.

தமிழ் தலைவாஸ் அணி கைக்கு வந்த வெற்றியை கடைசி சில நிமிடங்களில் பறிகொடுத்ததால் வீரர்கள் ஏமாற்றமடைந்தனர். இதனால் 5 புள்ளிகள் பெற வேண்டிய தமிழ் தலைவாஸ் அணி, போட்டி டிராவில் முடிவடைந்ததால் இரு அணிகளுக்கும் தலா 3 புள்ளிகள் வழங்கப்பட்டது.

top videos
    First published:

    Tags: Pro Kabaddi