புரோ கபடி 2021 : தமிழ் தலைவாஸை வீழ்த்தி பெங்களூரு புல்ஸ் அபார வெற்றி

புரோ கபடி 2021 லீக் போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியை சந்தித்துள்ளது.

  • News18 Tamil
  • | December 24, 2021, 22:04 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED A YEAR AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    21:40 (IST)

    ரெய்டில் பாய்ண்ட் எடுக்க முடியாமல் தமிழ் தலைவாஸ் ஏமாற்றத்தை சந்தித்துள்ளது. போட்டியின் இறுதியில் 30 - 38 என்ற கணக்கில் பெங்களூரு புல்ஸ் அபார வெற்றி  பெற்றுள்ளது.

    21:25 (IST)

    தமிழ் தலைவாஸ் மீண்டும் ஆல் அவுட்டாகி உள்ளது. இதனால் பெங்களூரு புல்ஸ் முன்னிலையில் உள்ளது. 28 - 31 என்று பெங்களூரு தற்போது முன்னிலையில் உள்ளது.

    21:11 (IST)

    தமிழ் தலைவாஸ் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. வீரர்கள் சீறி பாய்ந்து புள்ளிகளை அள்ளி வருகின்றனர். தற்போதைய நிலைக்கு 22 - 20 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளனர்.

    21:10 (IST)

    இராண்டாவது பாதி ஆரம்பித்த முதலே தமிழ் தலைவாஸ ஆக்ரேஷமாக விளையாடி 5 நிமிடங்களில் 8 பாயிண்ட்கள் எடுத்து பெங்களூரு புல்ஸ் ஆல் அவுட் செய்துள்ளது.

    21:3 (IST)

    தமிழ் தலைவாஸ் அணி ரெய்டில் 8 புள்ளிகளும், டேக்கிளில் 5 புள்ளிகளும் பெற்றுள்ளன. பெங்களூரு புல்ஸ்  ரெய்டில் 10, டேக்கிள் 7, எக்ஸ்டிரா 2 புள்ளிகள் பெற்றுள்ளன.

    21:2 (IST)

    முதல் பாதி முடிவில் தமிழ் தலைவாஸ் சறுக்கலை சந்தித்துள்ளது. முதல் பாதி முடிந்துள்ள நிலையில் 19 - 13 என்ற கணக்கில் பெங்களூரு புல்ஸ் முன்னிலையில் உள்ளது. 

    20:57 (IST)

    தமிழ் தலைவாஸ் அணி பாயிண்ட் எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். முதல் பாதியில் ஆல் அவுட்டாகி உள்ளனர். இதனால் பெங்களூரு புல்ஸ் அணி 17 - 11 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    20:48 (IST)

    முதல் பாதி இன்னும் சில நிமிடங்களில் முடிவடைய உள்ள நிலையில் இரு அணி வீரர்களும் ரெய்டில் புள்ளிகள் எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். 

    20:44 (IST)

    தமிழ் தலைவாஸ் -  பெங்களூரு புல்ஸ் அணிகள் மாறி மாறி புள்ளிகளை பெற்று வருகின்றனர். இரு அணிகளும் சமமான புள்ளிகளில் இருந்து வருகின்றனர். தற்போது வரை 4 - 4 என்று உள்ளனர்.

    19:25 (IST)

    தெலுங்கு டைட்டன்ஸ் உடனனான  முதல் லீக் போட்டியை 40 - 40 என தமிழ் தலைவாஸ் அணி டிரா செய்தது. தமிழ் தலைவாஸ் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் கடைசி நிமிடங்களில் தெலுங்கு டைட்டனஸ் வீரர்கள் சிறப்பாக விளையாடி டிரா செய்தனர்.