முகப்பு /செய்தி /விளையாட்டு / புரோ கபடி: வெற்றிப் பாதைக்கு திரும்புமா தமிழ் தலைவாஸ்?

புரோ கபடி: வெற்றிப் பாதைக்கு திரும்புமா தமிழ் தலைவாஸ்?

பயிற்சியாளருடன் (வலது) வீரர்கள் (Twitter/TamilThalaivas)

பயிற்சியாளருடன் (வலது) வீரர்கள் (Twitter/TamilThalaivas)

Pro Kabaddi 2018 Tamil Thalaivas vs Telugu Titans | Match Preview | 11 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ், 3 வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளது.

  • Last Updated :

புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி தனது 12-வது லீக் போட்டியில் இன்று தெலுகு டைட்டன்ஸ் அணி உடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

6-வது சீசன் புரோ கபடி லீக் தொடரானது கடந்த மாதம் 7-ம் தேதி முதல் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. மொத்தம் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பயிற்சியாளர் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களுடன் அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி களமிறங்கியது.

Tamil Thalaivas, புரோ கபடி
எதிரணி வீரரை மடக்கி பிடிக்கும் தமிழ் தலைவாஸ் வீரர்கள் (Twitter/TamilThalaivas)

சென்னையில் நடைபெற்ற தொடக்க போட்டியில் வெற்றி பெற்ற தமிழ் தலைவாஸ் அணி, தொடர்ந்து 5 தோல்விகளை சந்தித்தது. பின்னர், தட்டுத் தடுமாறி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. இதுவரை, 11 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ், 3 வெற்றியை மட்டுமே பதிவு செய்து, 'பி' பிரிவில் 20 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் பின்தங்கியுள்ளது.

இன்று தமிழ் தலைவாஸ் - தெலுகு டைட்டன்ஸ் மோதல்

இந்நிலையில், தமிழ் தலைவாஸ் அணி தனது 12-வது லீக் போட்டியில் தெலுகு டைட்டன்ஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது. எனவே, அகமதாபாத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புமா என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

புரோ கபடி, தமிழ் தலைவாஸ்
களத்தில் தமிழ் தலைவாஸ் அணி (Twitter/TamilThalaivas)

அத்துடன், அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க வேண்டும் என்றால், இனிவரும் போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டிய சூழலில் தமிழ் தலைவாஸ் இருக்கிறது.

மேலும் பார்க்க...

top videos

    First published:

    Tags: Pro Kabaddi League 2018, Tamil Thalaivas