முகப்பு /செய்தி /விளையாட்டு / Pro Kabaddi 2018: மீண்டும் வெற்றிப்பாதையில் தமிழ் தலைவாஸ்!

Pro Kabaddi 2018: மீண்டும் வெற்றிப்பாதையில் தமிழ் தலைவாஸ்!

ரைடு செல்லும் தமிழ் தலைவாஸ் கேப்டன் அஜய் (PKL)

ரைடு செல்லும் தமிழ் தலைவாஸ் கேப்டன் அஜய் (PKL)

Pro Kabaddi 2018: Tamil Thalaivas Beat Telugu Titans | நடப்பு சீசனில் 5-வது வெற்றியைப் பதிவு செய்த அந்த அணி ‘பி’ பிரிவு புள்ளிப்பட்டியலில் 30 புள்ளிகள் உடன் கடைசிக்கு முந்தைய இடத்தில் இருக்கிறது.

  • Last Updated :

புரோ கபடி லீக் தொடரில் தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி நடப்பு சீசனில் 5-வது வெற்றியைப் பதிவு செய்தது.

6-வது புரோ கபடி லீக் தொடரில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. புனேயில் நடந்த 83-வது லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, தனது 15-வது ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது.

போட்டியின் தொடக்கத்தில் இரு அணி வீரர்களும் மாறிமாறி புள்ளிகளை எடுத்தனர். ஒருகட்டத்தில் 8-8 என்று இரு அணிகளும் சம புள்ளிகளைப் பெற்றிருந்தன. பின்னர், அபாரமாக விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி முதல் பாதியில் 18-11 என்ற புள்ளி கணக்கில் முன்னிலைப் பெற்றது.

தொடர்ந்து, 2-வது பாதியிலும் தமிழ் தலைவாஸ் தன்னுடைய முன்னிலையை தக்க வைத்துக்கொண்டது. கடைசிக் கட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் அணி புள்ளிகளை எடுக்க மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இறுதியில், 31-25 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் கேப்டன் அஜய் தாகூர் 7 புள்ளிகள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

நடப்பு சீசனில் 5-வது வெற்றியைப் பதிவு செய்த அந்த அணி ‘பி’ பிரிவு புள்ளிப்பட்டியலில் 30 புள்ளிகள் உடன் கடைசிக்கு முந்தைய இடத்தில் இருக்கிறது.

மேலும் பார்க்க...

top videos

    First published:

    Tags: Pro Kabaddi League 2018