முகப்பு /செய்தி /விளையாட்டு / Pro Kabaddi 2018: தமிழ் தலைவாஸ் அணியை துவம்சம் செய்த பாட்னா!

Pro Kabaddi 2018: தமிழ் தலைவாஸ் அணியை துவம்சம் செய்த பாட்னா!

ரைடு செல்லும் தமிழ் தலைவாஸ் கேப்டன் அஜய் தாகூர் (ProKabaddi)

ரைடு செல்லும் தமிழ் தலைவாஸ் கேப்டன் அஜய் தாகூர் (ProKabaddi)

Pro Kabaddi 2018: Patna Pirates Thrash Tamil Thalaivas 45-27 | தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி பாட்னா பைரேட்ஸ் அணி 7-வது வெற்றியைப் பதிவு செய்தது.

  • Last Updated :

புரோ கபடி லீக் தொடரின் ‘பி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழ் தலைவாஸ் அணியை 45-27 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி பாட்னா பைரேட்ஸ் அணி 7-வது வெற்றியைப் பதிவு செய்தது.

6-வது புரோ கபடி லீக் தொடரானது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில், அகமதாபாத்தில் நடைபெற்ற 74-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ் அணியை எதிர்கொண்டது.

நடப்பு சீசனின் தொடக்க ஆட்டத்தில் பாட்னாவை வீழ்த்தியிருந்தது தமிழ் தலைவாஸ். அதனால், இந்த முறை மீண்டும் தமிழ் தலைவாஸ் அணியே வெற்றி பெறும் என்று தமிழ் ரசிகர்கள் எதிர்பார்ப்புடம் இருந்தனர்.

Pro Kabaddi
பாட்னா வீரர்களிடம் மாட்டிக்கொண்ட தமிழ் தலைவாஸ் வீரர் (Pro Kabaddi)

நெருங்கி வந்த தமிழ் தலைவாஸ் அணி

மிகவும் விறுவிறுப்பாக இருந்த இந்த போட்டியில் முதல் பாதி முடிவில் 16-13 என்ற புள்ளிகள் கணக்கில் பாட்னா முன்னிலையில் இருந்தது. ஒருகட்டத்தில் ஒரு கட்டத்தில் 15-16 என்று ஒருபுள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணி நெருங்கி வந்தது. ஆனால், 2-வது பாதியில் இரண்டு முறை ஆல்-அவுட் ஆனதால் நிறைய புள்ளிகளை கோட்டை விட்டது.

Pro Kabaddi
தமிழ் தலைவாஸ் - பாட்னா பைரேட்ஸ் இடைலான போட்டி (Pro Kabaddi)

தமிழ் தலைவாஸ் படுதோல்வி

அடுத்தடுத்து புள்ளிகளை எடுத்த பாட்னா அணியின் கேப்டன் பர்தீப் நார்வல் ரைடு மூலம் மொத்தம் 13 புள்ளிகளைச் சேர்த்தார். ஆட்டநேர முடிவில் பாட்னா அணி 45-27 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், பாட்னா பைரேட்ஸ் அணி 7-வது வெற்றியைப் பதிவு செய்தது.

தமிழ் தலைவாஸ் அணிக்கோ இது 8-வது தோல்வியாக அமைந்தது. 4 வெற்றி, 8 தோல்வி என 25 புள்ளிகளுடன் அந்த அணி ‘பி’ பிரிவு பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.

Also See...

top videos

    First published:

    Tags: Patna Pirates, Pro Kabaddi League 2018, Tamil Thalaivas