புரோ கபடி லீக் தொடரில், நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் பெங்கால் வாரியர்ஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகள் வெற்றி பெற்றன.
புரோ கபடி லீக் போட்டிகள் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள் அரங்கில் நடைபெற்று வருகின்றன. நேற்றைய முதல் ஆட்டத்தில், உள்ளூர் ரசிகர்கள் ஆதரவுடன் களம் கண்ட பெங்கால் வாரியர்ஸ், தமிழ் தலைவாஸை எதிர்கொண்டது.
இரு அணிகளும் மாறிமாறி புள்ளிகள் குவித்ததால் ஆட்டம் விறுவிறுப்படைந்தது. இறுதியில், பெங்கால் அணி 27-24 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று, நாக் அவுட் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.
அந்த அணியின் லீ ஜாங் குன் 12 புள்ளிகள் குவித்தார். Zone B பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ் தலைவாஸ் இதுவரை விளையாடிய 21 போட்டிகளில் 5 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 39 புள்ளிகளுடன், பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இரண்டாவதாக நடைபெற்ற Wild Card போட்டியில், புனேரி பல்தான் மற்றும் தெலுங்கு டைட்டன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வெற்றி வெற்றால் நாக்-அவுட் வாய்ப்பு என்ற நிலையில் களம் கண்ட தெலுங்கு டைட்டன் 20.35 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தது.
புனேரி பல்தான் வீரர் மோர் 10 புள்ளிகள் குவித்து தனது அணிக்கு வெற்றி தேடி தந்தார். புனே அணி ஏற்கெனவே நாக்-அவுட் சுற்று வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.
Also see...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pro Kabaddi League 2018