பாராலிம்பிக் வீரர்களுக்கு தனது இல்லத்தில் விருந்து வைத்த பிரதமர் மோடி

பாராலிம்பிக் வீரர்களுடன் மோடி

பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி இன்று அவரது இல்லத்தில் விருந்தளித்தார்.

  • Share this:
    ஜப்பான் தலைநகர் டோக்யோவில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாராலிம்பிக் தொடர் கடந்த மாதம் 24ம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் இந்தியா, சீனா, அமெரிக்கா உட்பட 163 நாடுகள் பங்கேற்றன. இந்தியாவை பொறுத்தவரை 9 வகையான ஆட்டங்களில் 54 வீரர்கள் கலந்து கொண்டனர். பாராலிம்பிக் தொடரில் இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கங்களுடன் இந்திய அணி, பதக்கப் பட்டியலில் 24வது இடத்தை பிடித்தது.

    இந்தநிலையில் இன்று இந்திய பாராலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அவரது இல்லத்தில் விருந்து அளித்தார். இந்த விருந்தில் பாராலிம்பிக் தடகள வீரர்களும், பயிற்சியாளர்களும் கலந்துகொண்டனர். ஒட்டுமொத்த குழுவினருடன் பிரதமர் மோடி இயல்பாகக் கலந்துரையாடினார். போட்டிகளில் வரலாற்று சிறப்பு மிக்க சாதனையைப் படைத்த அவர்களுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

    அவர்களது இந்த சாதனை, விளையாட்டு சமூகம் மொத்தத்திற்கும் ஊக்கமளிக்கும் என்றும், விளையாட்டுகளில் முன்னேற இளம் வீரர்களுக்கு எழுச்சியூட்டும் என்றும் அவர் தெரிவித்தார். அவர்களது செயல் திறனால் விளையாட்டு குறித்த விழிப்புணர்வு பெருமளவு அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

    போட்டிகளில் வெற்றி பெறாத வீரர்களின் மனநிலையை ஊக்குவிக்கும் வகையில், உண்மையான விளையாட்டு வீரர், வெற்றி, தோல்விகளால் துவளாமல் முன்னேறிச் செல்வார் என்று பிரதமர் குறிப்பிட்டார். அந்த பாராலிம்பிக் வீரர்கள் தான் நாட்டின் தூதர்கள், தங்களது குறிப்பிடத்தக்க செயல்திறனால் உலக அரங்கில் தேசத்தின் புகழை வீரர்கள் உயர்த்தியிருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பல்வேறு வீரர்கள், அவர்கள் பதக்கம் வென்ற விளையாட்டு உபகரணங்களில் தங்களது கையொப்பமிட்டு அதனை பரிசாக பிரதமருக்கு அளித்தனர். அனைத்து வீரர்களும் கையொப்பமிட்ட அங்கியும் பிரதமருக்கு பரிசாக வழங்கப்பட்டது.
    Published by:Karthick S
    First published: