ஐ.பி.எல் 2021 ஏலத்தின்போது ஷாரூக்கான் மகனை கிண்டலடித்த பிரீத்தி ஜிந்தா..

preity zinta

தமிழக வீரர் ஷாரூக்கானை வாங்குவதற்கு கடும்போட்டி நிலவியது. அவருக்கு அடிப்படை விலை 20 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 5.25 கோடி ரூபாய் கொடுத்து பஞ்சாப் அணி அவரை ஏலம் எடுத்தது.

  • Share this:
தமிழக வீரர் ஷாரூக்கானை, ஏலம் எடுத்தபிறகு பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் மகனை பிரீத்தி ஜிந்தா கிண்டலடித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

14-வது ஐ.பி.எல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நடைபெற்றது. இதில்,  53.20 கோடியுடன் ஏலத்தில் கலந்து கொண்ட பஞ்சாப் கிங்ஸ் அணி, 9 வீரர்களை தன்வசப்படுத்தி பிளேயிங் லெவனை பலப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரிச்சர்ட்சன் மற்றும் ரைலி மெரிடித் ஆகியோரை மிகப்பெரிய விலை கொடுத்து வாங்கியுள்ளது. அவர்களை வாங்குவதற்கு ஏலத்தில் கடும் போட்டி நிலவிய நிலையில், பஞ்சாப் அணி ஏலத்தில் வென்றது. சுவாரஸ்யமான நிகழ்வாக தமிழக வீரர் ஷாரூக்கானை வாங்குவதற்கு கடும்போட்டி நிலவியது. அவருக்கு அடிப்படை விலை 20 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 5.25 கோடி ரூபாய் கொடுத்து பஞ்சாப் அணி அவரை ஏலம் எடுத்தது.

அப்போது, உற்சாகத்தில் இருந்த பிரீத்தி ஜிந்தா, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக ஏலத்தில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் மகனான ஆர்யனைப் பார்த்து கிண்டலடித்தார். 'ஷாரூக்கானை நாங்கள் வாங்கிவிட்டோம்' என ஆர்யனை நோக்கி பிரீத்தி ஜிந்தா கைகளை உயர்த்திய வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.

ஆஸ்திரேலிய வீரர்களான ரிச்சர்ட்சன் 14 கோடிக்கும், மெரிடித் 8 கோடிக்கும் வாங்கிய பஞ்சாப், உலகின் நம்பர் 1 இருபது ஓவர் பேட்ஸ்மேனாக கருதப்படும் டேவிட் மாலனையும் 1.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான மோசஸ் ஹென்றிக்ஸையும் 4.2 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதுவரை ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடாத வீரர்களான  ஜலஜ் சக்சேனா, சவுரப் குமார் மற்றும் உட்கார் சிங் ஆகியோரும் பஞ்சாப் அணியுடன் இணைந்துள்ளனர். 

மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் பேபியன் ஆலனும் பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாட உள்ளார். தமிழக வீரர் ஷாரூக்கான் சையது முஷ்டாக் அலி போட்டியில் தமிழ்நாட்டு அணிகாக சிறப்பாக விளையாடினார். மிடில் ஆர்டரில் களம் இறங்கும் அவர் விரைவாக 30 முதல் 40 ரன்களை எடுப்பதால், ஐ.பி.எல் ஏலத்தில் ஷாரூக்கானை எடுக்க அணிகள் போட்டிப்போட்டனர். 

இந்த ஏலத்தை பேருந்தில் செல்லும்போது நேரலையாக பார்த்துக்கொண்டிருந்த தமிழக கிரிக்கெட் அணி வீரர்கள், ஷாரூக்கானை பஞ்சாப் அணி ஏலம் எடுத்ததும் உற்சாகத்தில் திளைத்தனர். மேலும், அவருக்கு அனைவரும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். ஏலத்தின் போது பிரீத்தி ஜிந்தா கொடுத்த ரியாக்ஷனை ஐ.பி.எல் -என் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்திலும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் டிவிட்டர் பக்கத்திலும் பகிரப்பட்டுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள், கொல்கத்தா ஷாரூக்கான் இனி பஞ்சாப் ஷாரூக்கான் என அழைக்கப்படுவார் என கூறி வருகின்றனர்.
Published by:Ram Sankar
First published: