Home /News /sports /

Exclusive : கார்ல்சன் செய்த தவறு இதுதான்! அதுவே திருப்புமுனையாக அமைந்தது - பிரக்ஞானந்தா

Exclusive : கார்ல்சன் செய்த தவறு இதுதான்! அதுவே திருப்புமுனையாக அமைந்தது - பிரக்ஞானந்தா

கார்ல்சன் செய்த தவறு இதுதான் - பிரக்ஞானந்தா

கார்ல்சன் செய்த தவறு இதுதான் - பிரக்ஞானந்தா

Praggnanandhaa | Chess | 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற வீரரை, சென்னையை சேர்ந்த 16 வயது சிறுவர் தோற்கடித்து சர்வதேச அளவில் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்.

    ஏர்திங் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில், உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய தமிழகத்தை சேர்ந்த 16 வயது சிறுவர் பிரக்யானந்தா நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.

    சர்வதேச செஸ் வீரர்கள் பங்கேற்கும் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் செஸ்போட்டிகள் ஆன்லைன் முறையில் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா தரப்பில் கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த 16 வயது பிரக்ஞானந்தா பங்கேற்றுள்ளார்.
    ஏர்திங்ஸ் தொடரில் ஆர்மேனிய வீரர் லெவோன் ஆரோனியனுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா 2 போட்டிகளை டிரா செய்தார். மற்ற போட்டிகள் தோல்வியில் முடிந்தன.

    இந்நிலையில் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் கருப்பு காய்களை தேர்வு செய்து பிரக்யானந்தா விளையாடினார். ஆட்டத்தின் 39வது நகர்வின்போது, மேக்னஸ் கார்ல்சன் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.

    5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற வீரரை, சென்னையை சேர்ந்த 16 வயது சிறுவர் தோற்கடித்து சர்வதேச அளவில் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். இதை தொடர்ந்து பிரக்ஞானந்தாவிற்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், சச்சின் டெண்டுல்கர் உட்பட பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    Also Read : நிச்சயம் டி20 உலகக்கோப்பை வாய்ப்பு உண்டு- ரோஹித் சர்மா கூறும் அதிர்ஷ்டக்கார வீரர்

    இந்நிலையில் உலக செஸ் சாம்பியனை வீழ்த்திய பிரக்ஞானாந்தா நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரேத்யேக பேட்டியளித்தார். அதில் கார்ல்சனை தோற்கடித்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. விஸ்வநாதன் ஆனந்த் தான் என்னுடைய ரோல் மாடல். அடுத்தக்கட்டமாக இத்தாலியில் நடைபெற உள்ள செஸ் போட்டியில் பங்கேற்க உள்ளேன். அடுத்தடுத்து பயிற்சிகளை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளேன்.



    தமிழ்நாட்டில் செஸ் மிகவும் பிரபலமாக உள்ளது. செஸ் விளையாட்டை ஜெயிக்க வேண்டுமென்று என்று நினைத்து விளையாடமால் அதை என்ஜாய் செய்து விளையாட வேண்டும். கார்ல்சன் உடன் விளையாடும் போது நான் வெற்றி, தோல்வி குறித்து எல்லாம் நினைக்கவில்லை. எனக்கு எப்படி தோன்றியதோ அதுமாதிரி தான் விளையாடினேன் என்றார். மேலும் கார்ல்சன் எந்த இடத்தில் தவறு செய்தார், அதை எப்படி பயன்படுத்தி கொண்டேன் என்பது குறித்து பிரக்ஞானந்தா பகிர்ந்து கொண்டார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Chess, Praggnanandhaa, Sports

    அடுத்த செய்தி