செஸ்ஸபிள் மாஸ்டர்ஆன்லைன் செஸ் போட்டிகள் 9 தொடர்களாக கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. 16 வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள இந்த போட்டியில் 16 வயது நிரம்பிய
சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவும் பங்கேற்றுள்ளார். செவ்வாய் கிழமை நடைபெற்ற காலிறுதியில் இந்திய இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர் பிரக்ஞானநந்தா 2.5-1.5 என்ற கணக்கில் சீனாவின் வெய் யியை தோற்கடித்திருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் 16 வயதான பிரக்ஞானந்தா அரையிறுதியில் அனிஷ் கிரியை எதிர்கொண்டார். மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர்-1 வீரர் மேக்னஸ் கார்ல்சன், சீனாவின் டிங் லிரனை எதிர்கொண்டார்.
அரையிறுதியில் அனிஷ் கிரி - பிரக்ஞானந்தா மோதினர். இந்த ஆட்டமானது நான்கு ரேபிட் சுற்றுகளாக நடத்தப்பட்டது. இதில் இருவரும் தலா ஒரு போட்டியில் வெற்றி, இரண்டு ஆட்டம் டிரா ஆனதால் 2-2 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையை எட்டினர். வெற்றியை தீர்மானிக்க பிளே ஆஃப் ஆட்டம் நடத்தப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மூன்று பிளிட்ஸ் போட்டி கொண்ட பிளே ஆஃப் சுற்றில் முதல் போட்டியை வென்ற பிரக்ஞானந்தா, இரண்டாவது போட்டியை டிரா செய்து டை பிரேக்கரில் 1.5 - 0 .5 என்ற புள்ளிக்கணக்கில் அனிஷ் கிரியை வீழ்த்தி, பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
Must Read : ஆரூத்ரா கோல்டு நிறுவனத்தில் ரெய்டு... 3 கோடியே 41 லட்சம் ரூபாய் பறிமுதல் - சீல் வைத்து நடவடிக்கை
காலை 8.45 மணிக்கு 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள நிலையில், இரவு முழுவதும் கண் விழித்து ஆன்லைன் செஸ் விளையாட்டில் உலக ஜாம்பவான்களை வீழ்த்தியுள்ளார் பிரக்ஞானந்தா என்பது குறிப்பிடத்தக்கது. செஸ்ஸபிள் மாஸ்டர் தொடரில் முதல் முறையாக இந்தியர் ஒருவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை நிகழ்த்தியுள்ளார். இறுதி ஆட்டத்தில் சீன வீரரும் உலக தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருப்பவரும், அரையிறுதியில் கார்ல்சனை வீழ்த்தியவருமான டிங் லைன் (Ding Liren) - யை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.