ஒரு கையில் குழந்தை மற்றொரு கையில் பேட்...சானியா மிர்சாவின் பவர்புல் போட்டோவிற்கு குவியும் பாராட்டு

சானியா மிர்சா கடந்த 2010ம் ஆண்டு பாகிஸ்தான் வீரர் சோகிப் மாலிக்கை திருமணம் செய்தார்.

ஒரு கையில் குழந்தை மற்றொரு கையில் பேட்...சானியா மிர்சாவின் பவர்புல் போட்டோவிற்கு குவியும் பாராட்டு
குழந்தையுடன் சானியா மிர்சா
  • Share this:
டென்னிஸ் போட்டியில் பங்கேற்க குழந்தையுடன் சானியா மிர்சா வந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

துபாயில் நடைபெறும் ஃபெட் கோப்பைக்கான தொடரில் கடந்த 8-ம் தேதி சானியா மிர்சா இந்தோனேசிய வீராங்கனையை எதிர்த்து விளையாடி வெற்றி பெற்றார். இந்தப் போட்டிக்கு முன் சானியா மிர்சா ஒரு கையில் அவரது குழந்தை இஷான் உடனும் மற்றொரு கையில் டென்னிஸ் பேட் உடனும் டென்னில் அரங்கில் நுழைந்தார்.


இந்த புகைப்படத்தை சானியா மிர்சா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கர்ப்பத்திற்கு பிறகும் சானியா மிர்சா டென்னிஸ் போட்டிகளில் கவனம் செலுத்தி வரும்நிலையில் குழந்தையுடன் அவர் பங்கேற்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சானியா மிர்சா கடந்த 2010-ம் ஆண்டு பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்தார். 2018-ம் ஆண்டு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். கர்ப்பத்திற்கு பின் 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் 2020 முதல் டென்னிஸ் போட்டியில் பங்கேற்று வருகிறார்.
First published: March 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்