ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

கால்பந்து: கோல்மழை.. ஹாட்ரிக் கோல்.. சுவிட்சர்லாந்தை அலறவிட்ட போர்ச்சுக்கல்!

கால்பந்து: கோல்மழை.. ஹாட்ரிக் கோல்.. சுவிட்சர்லாந்தை அலறவிட்ட போர்ச்சுக்கல்!

போர்ச்சுக்கல்

போர்ச்சுக்கல்

Portugal vs Switzerland Highlights : ஆட்டத்தை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்த போர்ச்சுகல் அணி, கோல் மழை பொழிந்தது. குறிப்பாக, ரமோஸ் ஹாட்ரிக் கோல் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணி, 6-1 என்ற கோல்கணக்கில் சுவிட்சர்லாந்து அணியை பந்தாடி, காலிறுதிக்குள் தடம் பதித்தது. இப்போட்டியில், போர்ச்சுகல் இளம் வீரர் ரமோஸ் ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை நிகழ்த்தினார்

போர்ச்சுகல் - சுவிட்சர்லாந்து அணிகள் மோதிய நாக்-அவுட் போட்டி, லுசைல் நகரில் உள்ள ஐகானிக் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு பிரதான அணியில் இடம் கிடைக்கவில்லை. இருப்பினும், அவர் இல்லாத குறையை 21 வயதான இளம் வீரர் கோன்சலோ ரமோஸ் போக்கினார். இவர், 17-வது நிமிடத்திலேயே, தனது அணிக்கான கோல்கணக்கை தொடங்கி வைத்தார்.

Also Read : கோல் அடித்தபோது கொண்டாடிய குடும்பம்.. வீடியோவை பார்த்து நெகிழ்ந்த மெஸ்ஸி.. வைரல் வீடியோ!

இதையடுத்து, 33-வது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் ஃபெர்னாண்டஸ் கார்னர் பகுதியில் இருந்து தூக்கி அடித்த பந்தை, சக வீரர் பெபே (PEPE) தலையால் முட்டி மிரட்டலான கோல் ஒன்றை பதிவு செய்தார். இதன் மூலம் 39 வயதான இவர், உலகக் கோப்பையில் அதிக வயதில் கோல் அடித்த இரண்டாவது வீரராக ஜொலித்தார்.

ஆட்டத்தை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்த போர்ச்சுகல் அணி, கோல் மழை பொழிந்தது. குறிப்பாக, ரமோஸ் ஹாட்ரிக் கோல் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். அத்துடன், உலகக் கோப்பை வரலாற்றில், 32 ஆண்டுகளுக்குப் பின் நாக்-அவுட் சுற்றில் ஹாட்ரிக் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையும் தட்டிச் சென்றார்.

நடப்பு உலகக் கோப்பையில் முதல் ஹாட்ரிக் கோலாகவும் இது பதிவானது.74-வது நிமிடத்தில் மாற்று வீரராக ரொனால்டோ, களம் கண்டதும் ரசிகர்கள் எழுப்பிய உற்சாக குரலால் மைதானமே அதிர்ந்தது. வந்த உடனேயே அவர் ஒரு கோல் அடித்தார். ஆனால், அது ஆஃப் சைடு கோலாக மாறி, வீணானது.

கடைசி வரை போராடியும் சுவிட்சர்லாந்து அணியால் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால், 6-1 என்ற கோல்கணக்கில் போர்ச்சுகல் அணி அபார வெற்றிபெற்று, காலிறுதிக்குள் தடம் பதித்தது. மேலும், 2006-க்குப் பின் உலகக் கோப்பையில் காலிறுதிக்கு முன்னேறி போர்ச்சுகல் அசத்தியது.

First published:

Tags: FIFA World Cup 2022