ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

'இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி' - மெஸ்ஸி, அர்ஜெண்டினா அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்த பிரதமர் மோடி!

'இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி' - மெஸ்ஸி, அர்ஜெண்டினா அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்த பிரதமர் மோடி!

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

FIFA World Cup 2022 : அர்ஜென்டினா அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விறுவிறுப்பின் உச்சம் தொட்ட உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி, ஷூட்-அவுட் முறையில் 4-2 என்ற கோல்கணக்கில் பிரான்சை வீழ்த்தியது.

இதன் மூலம், 36 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கோப்பையை அர்ஜென்டினா உச்சி முகர்ந்தது. வரலாற்று வெற்றியை சாதித்து காட்டிய அர்ஜெண்டினா அணிக்கும், மெஸ்ஸிக்கும் உலகத்தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அர்ஜென்டினா அணிக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்த போட்டி மிகவும் பரபரப்பான கால்பந்து போட்டிகளில் ஒன்றாக நினைவு கூரப்படும் என்றும், அர்ஜென்டினா மற்றும் மெஸ்சியின் லட்சக்கணக்கான இந்திய ரசிகர்கள், இந்த வெற்றியில் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரான்ஸ் அணி தங்கள் திறன் மற்றும் விளையாட்டு திறமையால் ரசிகர்களை மகிழ்வித்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

First published:

Tags: FIFA World Cup 2022