ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

சமஸ்கிருதத்தில் கிரிக்கெட் வர்ணணை செய்தவருக்கு பிரதமர் மோடி பாராட்டு - வைரல் வீடியோ

சமஸ்கிருதத்தில் கிரிக்கெட் வர்ணணை செய்தவருக்கு பிரதமர் மோடி பாராட்டு - வைரல் வீடியோ

 பிரதமர் மோடி

பிரதமர் மோடி

சமஸ்கிருதத்தில் கிரிக்கெட்டை வர்ணனை செய்ததை பார்ப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த முயற்சியை மேற்கொள்பவருக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சமஸ்கிருதத்தில் கிரிக்கெட் வர்ணணை செய்து வீடியோ வெளியிட்டவருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

  ஆங்கிலம்,தமிழ், இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் தற்போது கிரிக்கெட் போட்டிகளை நேரலையில் வர்ணனை செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தெருவில் விளையாடிய சிறுவர்களை வீடியோ சமஸ்கிருதத்தில் வர்ணனை செய்துள்ளார்.

  இதையும் படிங்க: ஸ்மைல் ப்ளீஸ்.. ஆஸ்திரேலியா செல்லும் இந்தியப்படை - புகைப்படம் வெளியிட்ட பிசிசிஐ

  பெங்களூரு கிரிநகர் பகுதியில் வசித்து வரும் உப்பள்ளியை சேர்ந்தவர் லட்சுமி நாராயண். இவரது வீட்டின் அருகே உள்ள மைதானத்தில் சில இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டு இருந்தனர். அதனை லட்சுமி நாராயண் சமஸ்கிருதத்தில் வர்ணனை செய்து வீடியோ எடுத்து இருந்தார். அந்த வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்திலும் வெளியிட்டு இருந்தார்.

  இந்த நிலையில் இந்த வீடியோவை பார்த்த பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்து பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், சமஸ்கிருதத்தில் கிரிக்கெட்டை வர்ணனை செய்ததை பார்ப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த முயற்சியை மேற்கொள்பவருக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: PM Narendra Modi, Sanskrit