Tokyo Olympics | வெற்றியும் தோல்வியும் வாழ்வின் பகுதி- தமிழக வீராங்கனை பவானி தேவிக்கு பிரதமர் மோடி ஆறுதல்

மோடி பவானி தேவி

வெற்றியும் தோல்வியும் வாழ்வின் ஒரு பகுதி என்று வாள்சண்டை வீராங்கனை பவானி தேவிக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    டோக்கியோ ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி முதல் சுற்றில் வெற்றி பெற்று தடம்பதித்தார் ஆனால் துரதிர்ஷ்டவசமாக பெண்களுக்கான தனிநபர் சாப்ரே பிரிவின் இரண்டாம் சுற்றில் பவானி தேவி உலகின் நம்பர் 3 வீராங்கனை மனான் புருனேவிடம் 7-15 என்று போராடித் தோல்வி அடைந்தார்.

    பெண்களுக்கான தனிநபர் சாப்ரே பிரிவின் முதல்சுற்றில் தமிழக வீராங்கனை பவானி தேவி, துனிசியாவின் நாடியா பென் அஜிசியும் மோதினர். இதில் பவானி தேவி 15-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். ஆனால் அடுத்த சுற்றில் பிரான்ஸ் வீராங்கனை மனான் புரூனேவுக்கு பவானி தேவி நல்ல ஃபைட் கொடுத்தார்.

    ஆனாலும் முதன் முதலில் ஒலிம்பிக் போட்டிகளில் வாள்வீச்சுக்கு தகுதி பெற்று முதல் சுற்றிலேயே வெற்றி பெற்று கலக்கிய அளவில் பவானி தேவிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பது அடுத்த சுற்றில் தோல்வியடைந்தாலும் அவர் சவால் அளித்த விதத்தில் தெரிந்தது.2-8 என்று பின் தங்கியிருந்த பவானி தேவி பிறகு 5 புள்ளிகளைப் பெற்றார். பவானிதேவி பிரான்ஸ் வீராங்கனைக்கு சில நெருக்கடிகளைக் கொடுத்தார்.

    ஆனால் அவர் உலக நம்பர் 3 வீராங்கனை, அதனால் அனுபவத்தினால் பவானி தேவியின் சவால்களை முறியடித்து காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றார். சென்னையைச் சேர்ந்த பவானி தேவிக்கு வயது 27, இவரது பயிற்சியாளர் இத்தாலியைச் சேர்ந்த நிகோலா சனோட்டியாவார். இத்தாலியில் பயிற்சி பெற்று கடினமான பாதையில் பயணித்த பவானி தேவி 2009-ல் முதன் முதலில் வெண்கலம் வென்றார். 2010-ல் ஆசிய வாள்விச்சிலும் பதக்கம் வென்றார்.



    பதக்கம் வெல்லாதது குறித்த பவானி தேவியின் ட்விட்டர் பதிவில், ‘மிகப் பெரிய நாள். இது உற்சாகத்துடனும், உணர்ச்சிமிகுந்ததாகவும் இருந்தது. நான் முதல் போட்டியில் 15/3 என்ற கணக்கலில் நாடியா அசிசியை வென்று வாள்வீச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்திய வீராங்கனையாக இடம் பிடித்தேன். ஆனால், இரண்டாவது போட்டியில் 7/15 என்ற கணக்கில் உலகின் சிறந்த வீராங்கனையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் மேனான் ப்ரூநெட்டிடம் தோல்வியடைந்தேன். நான் என்னுடைய பங்கை சிறப்பாகச் செய்தேன்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆனால், வெற்றி பெற்றமுடியவில்லை. நான் வருந்துகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். அவருடைய பதிவுக்கு பதிலளித்த பிரதமர் மோடி, ‘உங்களுடைய சிறப்பான ஆட்டத்தை நீங்கள் கொடுத்துள்ளீர்கள். அது எல்லாம் கணக்கில் கொள்ளப்படும். வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் ஒரு பகுதி. உங்களுடைய பங்களிப்பால் இந்தியா பெருமைப்படுகிறது. நம்முடைய குடிமகன்களுக்கு நீங்கள் முன்னுதாரணம்’ என்று தெரிவித்தார்.
    Published by:Karthick S
    First published: