உங்களது ஓய்வு முடிவு 130 கோடி இந்தியர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது - தோனிக்கு மோடி புகழாரம்

மகேந்திர சிங் தோனி, பிரதமர் நரேந்திர மோடி

புதிய இந்தியாவிற்கான உத்வேகமாக மகேந்திர சிங் தோனி இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற மகேந்திர சிங் தோனிக்கு பிரதமர் மோடி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், உங்களது ஓய்வு முடிவு 130 கோடி இந்தியர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியிருந்தாலும், இந்திய கிரிக்கெட்டிற்காக கடந்த பத்தரை ஆண்டுகளாக நீங்கள் ஆற்றிய பணிக்காக அவர்கள் கடமைபட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.

  வெற்றிகரமான கேப்டனாக இந்திய அணியை உலக கிரிக்கெட்டில் தோனி முன்னெடுத்துச் சென்றதாகவும் மோடி கூறியுள்ளார், தோனி உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன், சிறந்த கேப்டன் குறிப்பாக தலைசிறந்த விக்கெட் கீப்பர் என மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

  சிறந்த மேட்ச் பினிஷர் தோனி என்றும், 2011 உலகக்கோப்பையில் அவரது ஆட்டம் தலைமுறைகள் கடந்தும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கும் எனவும் மோடி கூறியுள்ளார்.

  சிறிய கிராமத்தில் பிறந்து படிப்படியாக வாழ்வில் உயர்ந்து நாட்டிற்கே பெருமை தேடித் தந்த உங்களது வாழ்க்கை இன்றையை இளைஞர்களுக்கு பாடம் என்றும், வாழ்க்கை முன்னேற எந்த பின்புலமும் தேவையில்லை என்ற புதிய இந்தியாவிற்கான உத்வேகமாக மகேந்திர சிங் தோனி இருப்பதாகவும் தோனிக்கு மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.  Also read... தோனி உட்பட 14 சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு கொரோனா நெகட்டிவ்...

  நெருக்கடியான நேரங்களில் துணிந்து முடிவெடுக்கும் உங்களது திறனுக்கு உதாரணமாக 2007 டி20 உலகக்கோப்பையின் இறுதி ஆட்டத்தை குறிப்பிடலாம். இந்திய ராணுவத்துடனான உங்கள் உறவு மகத்தானது. இந்த தருணத்தில் உங்கள் மனைவி ஷாக்சி மற்றும் மகள் ஜிவாவிற்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.  அவர்களின் ஒத்துழைப்பும் தியாகமும் இல்லாமல் இந்த அளவிற்கு நீங்கள் சாதனை படைத்திருக்க முடியாது எனவும் தோனிக்கு எழுதிய கடிதத்தில் மோடி குறிப்பிட்டுள்ளார்.
  Published by:Vinothini Aandisamy
  First published: