கை இழந்த போதும் தன்னம்பிக்கையை கைவிடாத இளைஞர்... இந்திய அணிக்கு தேர்வான தமிழர்!

2017ம் ஆண்டு நடைபெற்ற தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான மினி கால்பந்து போட்டியில் அணிக்கு தலைமையேற்று வழிநடத்தியவர் பாலமுருகன்.

கை இழந்த போதும் தன்னம்பிக்கையை கைவிடாத இளைஞர்... இந்திய அணிக்கு தேர்வான தமிழர்!
மாற்றுத்திறனாளி இளைஞர் பாலமுருகன்
  • News18
  • Last Updated: June 24, 2019, 7:30 PM IST
  • Share this:
மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய கால்பந்தாட்ட அணிக்கு தேனியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தேர்வாகியுள்ளார். போட்டியில் பங்கேற்கச் செல்ல போதிய வசதியில்லாமல் அரசு உதவியை எதிர்பார்த்து வருகிறார்.

தேனி மாவட்டம் கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி இளைஞர் பாலமுருகன். பிறக்கும் போதே இடது கை இல்லாமல் பிறந்த இவர், கால்பந்து போட்டியில் அதீத ஈடுபாடு கொண்டவர். இவரது தந்தை குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றதால் தாய் ராணி அன்றாடம் கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தை கவனித்து வருகிறார்.

தாழ்வு மானப்பான்மையால் கால்பந்தாட்டத்தைத் தவிர்த்து வந்த பாலமுருகன் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அளித்த ஊக்கத்தால் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தி வந்தார்.


2017-ம் ஆண்டு நடைபெற்ற தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான மினி கால்பந்து போட்டியில் அணிக்கு தலைமையேற்று வழிநடத்தியவர் பாலமுருகன். தெற்காசிய அளவிலான மினி கால்பந்து போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்று அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளார்.

வரும் அக்டோபர் மாதம் ஜோர்டானில் நடைபெறும் கால்பந்து போட்டிக்கு இந்தியா சார்பில் தேர்வாகியுள்ளார். ஆனால், போட்டிக்கு பங்கேற்க செல்ல விமான கட்டணம் உள்ளிட்ட செலவுகளை சமாளிக்க போதிய வசதியில்லாமல் பாலமுருகன் தவித்து வருகிறார்.

ஒரு கையில்லாமல் வாழ்க்கையில் சாதிக்கத் துடிக்கும் இதுபோன்ற வீரர்களுக்கு அரசு மற்றும் தன்னார்வலர்கள் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.

Loading...

Also Watch

First published: June 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...