நடப்பு யூரோ கால்பந்து திருவிழாவில் வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்புகள்

யூரோ 2020

நடப்பு யூரோ கால்பந்து லீக் மற்றும் நாக் அவுட் போட்டிகளில் 17 பெனால்டி வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 9 வாய்ப்புகள் கோலாக மாற்றப்பட்டுள்ளது.

  • Share this:
கால்பந்து வீரர்கள், ரசிகர்கள் என அனைவரின் பிபி – யை எகிரச்செய்யும் பெனால்டி சூட் அவுட் என்றாலே ஒரு திகில் கலந்த ஆனந்தம் குடிகொண்டிருக்கும். இதுவரை நடைபெற்ற லீக் மற்றும் நாக் அவுட் போட்டிகளில் 17 பெனால்டி வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 9 வாய்ப்புகள் கோலாக மாற்றப்பட்டுள்ளது. 8 வாய்ப்புகள் வீணடிக்கப்பட்டுள்ளன.

போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டி இரண்டு பெனால்டி வாய்ப்புகளை கோலாக மாற்றி அசத்தியுள்ளார் ஹங்கேரி மற்றும் பிரான்ஸ் அணிக்கு எதிராக இந்த கோல்களை பதிவு செய்துள்ளார்.

இங்கிலாந்து கேப்டன் ஹேரி கேன், வேல்ஸ் கேப்டன் பேலே, ஸ்பெயின் வீரர் மொரோடா போன்ற நட்சத்திரங்கள் உட்பட 9 வீரர்கள் அடித்த பெனால்டி வாய்ப்புகளை கோல்கீப்பர்கள் அற்புதமாக தடுத்து தங்கள் நாட்டு ரசிகர்களை மகிழ்ச்சியும் உச்சத்திற்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: