இந்தியாவுக்கு இன்று யோகமான நாள்.. பாராலிம்பிக்கில் பதக்கங்களை குவிக்கும் வீரர்கள்

பாராலிம்பிக்

இந்தியாவுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைந்துள்ளது. காலையில் இருந்தே இந்திய வீரர்கள் பதக்க வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

 • Share this:
  பாராலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். 

  மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைந்துள்ளது. காலையில் இருந்தே இந்திய வீரர்கள் பதக்க வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

  துப்பாக்கி சுடுதல் தங்கம் வென்ற அவனி லெகாரா


  மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா தங்கம் வென்றார். இந்தப்போட்டியில் 249.6 புள்ளிகள் பெற்று உலக சாதனையை சமன் செய்துள்ளார்.  மேலும் இந்தியாவுக்கு முதல் தங்க பதக்கம் பெற்று தந்து அவனி லெகாரா வரலாறு படைத்து உள்ளார்.

  யோகேஷ் கதூனியா


  அதேபோல் இன்று நடந்த வட்டு எறிதலில் F56பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் யோகேஷ் கதூனியா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

  இந்திய வீரர்கள் தேவேந்திர ஜஜாரியா, சுந்தர் சிங்


  ஈட்டி எறிதலில் கிளாஸ் F45 பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா வெள்ளிப்பதக்கமும், சுந்தர் சிங் வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளார்.
  Published by:Ramprasath H
  First published: