பாராலிம்பிக்கில் வட்டு எறிதலில் வெண்கலம் வென்ற இந்திய வீரரின் வெற்றி நிறுத்திவைப்பு - காரணம் என்ன?

வினோத் குமார்

டோக்கியோ பாராலிம்பிக்கில் வட்டு எறிதலில் வெண்கலப் பத்தகம் வென்ற இந்திய வீரர் வினோத் குமாரின் வெற்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டிகளில் 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில், இன்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை பவினா பென் படேல் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று கொடுத்தார்.

  இந்நிலையில்,டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் டி 47 இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நிஷாத் குமார் 2.06 மீ தாண்டி வெள்ளி வென்று சாதனைப் புரிந்துள்ளார். இதன்மூலம், ஆசிய சாதனையை அவர் படைத்துள்ளார். மேலும்,இது பாராலிம்பிக்கில் இந்தியா பெற்ற இரண்டாவது பதக்கம் ஆகும். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வட்டு எறிதல் போட்டியிலும் இந்திய வீரர் வினோத் குமார் 19.91 மீட்டர் தூரம் வீசி வெண்கலப் பதக்கம் வென்றார்.

  இந்தப் போட்டியில் போலந்து வீரர் கோஸ்விச் 20.02 மீட்டர் தூரம் வீசி தங்கப் பதக்கமும், குரோஷிய வீரர் வெலிமிர் சாண்டர் 19.98 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப் பதக்கமும் வென்றார். இந்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியா ஒரே நாளில் மூன்று பதக்கங்களை உறுதிப்படுத்தியது. ஆனால், தற்போது வினோத் குமாரின் வெற்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணம் தெரியவில்லை.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதுகுறித்து தெரிவித்த குர்சரண் சிங், ‘வினோத் குமாரின் வெற்றிக்கு எதிராக ஒரு நாடோ அல்லது சில நாடுகளோ எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தெரிவித்து தெரியவில்லை. அதனை இப்போது வெளியே சொல்ல முடியாது. பாராலிம்பிக் தொடங்குவதற்கு முன்பே வினோத் குமாரை வகைப்படுத்தியதில் ஏதேனும் பிரச்னை இருக்கலாம்’ என்று தெரிவித்தார். அதனால், வெற்றி விழா நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை மாலை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
  Published by:Karthick S
  First published: