Home /News /sports /

இந்தியா வருகிறது பாகிஸ்தான் ஹாக்கி அணி!

இந்தியா வருகிறது பாகிஸ்தான் ஹாக்கி அணி!

இந்தியா - பாகிஸ்தான் வீரர் மோதும் நிகழ்வு (Getty Images)

இந்தியா - பாகிஸ்தான் வீரர் மோதும் நிகழ்வு (Getty Images)

Pakistan to Participate in Hockey World Cup After Getting Indian Visa, New Sponsor | பாகிஸ்தான் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் தாகீர் தார் மற்றும் தனீஷ் கலீம் ஆகியோர் விசா இன்னும் கிடைக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    இந்திய அரசு விசா வழங்கியதை அடுத்து உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் ஹாக்கி அணி வருவது உறுதியாகிவிட்டது.

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 14-வது உலகக்கோப்பை ஹாக்கி தொடரானது வரும் 28-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், 16 நாடுகளைச் சேர்ந்த ஹாக்கி அணிகள் பங்கேற்க இருக்கின்றன. இந்த முக்கியமான போட்டியில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் அணி விசா கேட்டு இந்திய அரசிடம் விண்ணப்பித்து இருந்தது. ஆனால், இரு நாட்டு எல்லைப் பகுதியில் நிலவு வரும் பதற்றமாக சூழலால் விசா குறித்து முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டு இருந்தது.

    ஜூனியர் அணிக்கு விசா மறுப்பு

    2 ஆண்டுகளுக்கு முன், ஜூனியர் உலக்கோப்பை ஹாக்கி போட்டி இந்தியாவில் நடைபெற்றது. அப்போது, இந்தியா வர திட்டமிட்டிருந்த பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்கப்படவில்லை.
    அதேபோல், தற்போதும் விசா கிடைக்காவிட்டால் பெரும் பாதிப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என பாகிஸ்தான் ஹாக்கி சங்கம் அச்சத்தில் இருந்தது.

    பாகிஸ்தான் ஹாக்கி அணி  (PHP)


    பாகிஸ்தான் அணிக்கு விசா கொடுக்க சம்மதம்

    இந்நிலையில், உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் கலந்துகொள்வதற்காக இந்தியா வரயிருக்கும், பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்கப்பட்டு விட்டதாக, அந்நாட்டு ஹாக்கி சங்கச் செயலாளர் ஷாபாஸ் அகமது கூறியுள்ளார். ஆனால், தலைமை பயிற்சியாளர் தாகீர் தார் மற்றும் தனீஷ் கலீம் ஆகியோர் விசா இன்னும் கிடைக்கவில்லை.

    இதற்கிடையே, ஸ்பான்சர் இல்லாமல் தவித்த வந்த பாகிஸ்தான் அணிக்கு, இந்தியா வந்து செல்ல ஏதுவாக 9 மில்லயன் பாகிஸ்தான் ரூபாய் வழங்க ஒரு நிறுவனம் முன்வந்துள்ளது. இந்த நல்ல செய்திகளால் பாகிஸ்தான் அணி இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறது.

    Also See...

    Published by:Murugesan L
    First published:

    Tags: Hockey, India vs Pakistan Hockey

    அடுத்த செய்தி