இங்கிலாந்து செல்ல பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அனுமதி

மாதிரி படம்

பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட், மூன்று டி20 தொடர்களில் விளையாட அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அனுமதியளித்துள்ளார்.

  • Share this:
கொரோனோ அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இங்கிலாந்தில் கொரோனோ பரவல் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளை நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தீவிரம் காட்டி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூலை 8 ம் தேதி தொடங்குகிறது.

இதனை தொடர்ந்து செப்டம்பர் - நவம்பர் மாதங்களில் பாகிஸ்தான் அணியுடன் மூன்று டெஸ்ட், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளது.

இதற்காக பாகிஸ்தான் அணியிலிருந்து 29 வீரர்கள், 14 ஊழியர் இந்த மாதம் இறுதியில் இங்கிலாந்து செல்ல பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அனுமதி வழங்கியுள்ளார்.

இந்த மாத இறுதியில் இங்கிலாந்து செல்லும் பாகிஸ்தான் அணி 14 நாட்கள் தனிமைபடுத்தப்பட்டு கொரோனோ பரிசோதனை செய்யப்படவுள்ளனர்.

பிறகு மூன்று முதல் நான்கு வாரங்கள் வரை அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ப பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். போட்டி திட்டமிட்டபடி செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது. இதற்கான அட்டவணையை இரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் பேசி முடிவு செய்யவுள்ளனர்.

Also read... சுசாந்த் சிங் தற்கொலை... பாலிவுட்டில் திறமைசாலிகள் புறக்கணிப்படுவதாக பிரபலங்கள் குற்றச்சாட்டு

அழகோ அழகு அவள் கண்ணழகு... சுனைனாவின் கியூட் போட்டோஸ்!
Published by:Vinothini Aandisamy
First published: