Home /News /sports /

இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு பிறகு பாகிஸ்தான் வீரர்களுக்கு இப்படி ஒரு சலுகையா?

இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு பிறகு பாகிஸ்தான் வீரர்களுக்கு இப்படி ஒரு சலுகையா?

பாகிஸ்தான் அணி

பாகிஸ்தான் அணி

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு புது கட்டுப்பாடுகளை விதித்தது. அதாவது, உலகக் கோப்பை போட்டியின் போது வீரர்கள் தங்களது மனைவி மற்றும் குடும்பத்தினரை தங்களுடன் தங்க வைக்க தடைவிதித்தது.

  • News18
  • Last Updated :
 இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடும் போட்டிக்குப் பிறகு பாகிஸ்தான் வீரர்களுக்கு சலுகையாக அவர்களது குடும்பத்தினரை தங்களுடன் தங்க வைத்துக்கொள்ளலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனுமதியளித்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, வரும் 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது.

சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரானத் தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடியபோது அவர்கள் தங்கள் குடும்பத்தாரை உடன் தங்க வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அந்த தொடரில் பாகிஸ்தான் மிக மோசமாக தோல்வியைத் தழுவியது.

அதனையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு புது கட்டுப்பாடுகளை விதித்தது. அதாவது, உலகக் கோப்பை போட்டியின் போது வீரர்கள் தங்களது மனைவி மற்றும் குடும்பத்தினரை தங்களுடன் தங்க வைக்க தடைவிதித்தது.

என்ன காரணமென்றால், போட்டியின்போது வீரர்களுக்கு கவனச் சிதறல் வரலாம், அதனால் போட்டியில் வீரர்கள் சிறப்பாக விளையாட மாட்டார்கள் என்பதால் இந்த முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய எடுத்தது.
இதனால், பாகிஸ்தான் வீரர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

பின்னர் வீரர்கள் சார்பில் புது கோரிக்கை ஒன்று பாகிஸ்தான் வாரியத்திடம் வைக்கப்பட்டது.
அக்கோரிக்கை என்னவென்றால், வரும் ஜூன்12-ம் தேதி நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கு பிறகு தாங்கள் தங்கள் குடும்பத்தினரை தங்க அனுமதி அளிக்கவேண்டும் என்பதுதான்.

இந்நிலையில் ஜூன் 16 ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடும் போட்டிக்குப் பிறகு பாகிஸ்தான் வீரர்கள் அவர்களது குடும்பத்தினரை தங்களுடன் தங்க வைத்துக்கொள்ளலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.
Published by:Anand Kumar
First published:

Tags: India vs Pakistan, World cup cricket 2019

அடுத்த செய்தி