இந்திய பெண்ணைத் திருமணம் செய்யும் பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்!

பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி(25) இதுவரை 53 ஒரு நாள் போட்டிகளிலும், 9 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.

Vijay R | news18
Updated: July 31, 2019, 5:24 PM IST
இந்திய பெண்ணைத் திருமணம் செய்யும் பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்!
ஹசன் அலி
Vijay R | news18
Updated: July 31, 2019, 5:24 PM IST
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி இந்தியப் பெண் ஷாமியா அர்சூவை மணக்கவுள்ளார்.

ஷாமிய அர்சூ ஹரியானாவில் உள்ள தனியார் விமான நிறுவனத்தில் பணியாற்று வருகிறார். இங்கிலாந்தில் பொறியியல் படிப்பை முடித்த இவர் துபாயில் வேலைபார்த்து வருகிறார். குடும்பத்தினருடன் தற்போது துபாயில் வசித்து வரும் ஷாமிய அர்சூவின் உறவினர்கள் சிலர் டெல்லியிலும் வசித்து வருகின்றனர்.

இவர்களது திருமணம் ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி துபாயில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஷாமியா - ஹசன் இருவரும் நண்பர்கள் மூலமாக முதலில் பழகி தற்போது திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.


பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி(25) இதுவரை 53 ஒரு நாள் போட்டிகளிலும், 9 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். 2017-ம் ஆண்டு சாம்பியன் டிராபியில் இவர் சிறப்பாக விளையாடினார். இதன்பின் நடைபெற்ற போட்டிகளில் இவர் சொதப்பியதால் உலகக் கோப்பை தொடரின் பாதியில் இவர் வெளியேற்றப்பட்டார்.

பாகிஸ்தான் அணியின் ஆல்-ரவுண்டர் சோகிப் மாலிக் கடந்த 2010-ம் ஆண்டு இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடதக்கது.
First published: July 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...