ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

U19 ஆசிய கோப்பை : இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் த்ரில் வெற்றி

U19 ஆசிய கோப்பை : இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் த்ரில் வெற்றி

U19 ஆசிய கோப்பை தொடரின் குரூப் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

U19 ஆசிய கோப்பை தொடரின் குரூப் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

U19 ஆசிய கோப்பை தொடரின் குரூப் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

  • 2 minute read
  • Last Updated :

U19 ஆசிய கோப்பை தொடர் கடந்த 23-ம் தேதி ஐக்கிய அமீரகத்தில் தொடங்கியது. துபாயில் இன்று நடைபெற்ற போட்டியில் குரூப் ஏ பிரிவு போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக அங்கிரிஷ் ரகுவன்ஷி மற்றும் ஹர்னூர் சிங் களமிறங்கினர். அங்கிரிஷ் ரகுவன்ஷி ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அடுத்து களமிறங்கிய ஷேக் ரஷீத் 6 ரன்களிலும், கேப்டன் யாஷ் துல் டக் அவுட்டாகியும் பெவிலியன் திரும்பினர்.

இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறினாலும் மற்றொரு தொடக்க வீரர் ஹர்னூர் சிங் நிதானமாக விளைாயாடி 46 ரன்கள் குவித்தார். பின்வரிசையில் இறங்கிய விக்கெட் கீப்பர் ஆராத்யா யாதவ் சிறப்பாக விளையாடி 50 ரன்கள் விளாசினார். இறுதியாக இந்திய அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 237 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Also Read : 2021-ல் கிரிக்கெட்டுக்கு பிரியாவிடை கொடுத்த டாப் பிளேயர்கள்

பாகிஸ்தான் அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் ஜீஷான் ஜமீர் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர் அப்துல் வாஹித் முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார்.

இதையடுத்து முஹம்மது ஷெஹ்சாத் களமிறங்கி பொறுப்புடன் விளையாடி பாகிஸ்தான் அணிக்கு நம்பிக்கை அளித்தார். சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தாலும் முஹம்மது ஷெஹ்சாத் கடந்த நிலையில் 81 ரன்களில் ரன்அவுட்டாகி வெளியேறினார்.

Also Read : இங்கிலாந்து அணிக்குள் பிளவு: ரூட்- ஆண்டர்சன் மோதல்

இந்திய அணியும் பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்ததால் போட்டியில் யார் வெற்றி பெறுவாரகள் என்ற பரபரப்பு நீடித்தது. கடைசி ஓவரில் பாகிஸ்தான் வெற்றி பெற 8 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை இந்திய அணி சார்பில் ரவிகுமார் வீசினார். முதல் பந்தில் விக்கெட் அடுத்த இரண்டு மற்றும் மூன்றாவது பந்தில் தலா ஒரு ரன் எடுக்கப்பட்டது.

இதையடுத்து 4 மற்றும் 5-வது பந்தில் தலா 2 ரன்கள் எடுக்கப்பட்டதால் கடைசி பந்தில் பாகிஸ்தான் வெற்றி பெற 2 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தை எதிர்கொண்ட அஹமது கான் பவுண்டரி விளாசி அணியை வெற்றி பெற செய்தார். கடைசி ஓவர்களில் அஹமது கான் 19 பந்துகளில் 29 ரன்கள் அடித்தது பாகிஸ்தான் அணிக்கு வெற்றி வாய்ப்பை பெற்று தந்தது.

First published: