Home /News /sports /

சென்னை ஓபன் டென்னிஸ் - 5 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இன்று தொடங்குகிறது

சென்னை ஓபன் டென்னிஸ் - 5 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இன்று தொடங்குகிறது

சென்னை ஓபன் டென்னிஸ் இன்று தொடங்குகிறது

சென்னை ஓபன் டென்னிஸ் இன்று தொடங்குகிறது

Chennai Open tennis: சென்னையின் அடையாளங்களில் ஒன்றான சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்குகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
    சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் தொடர் இன்று தொடங்குகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 32 வீராங்கனைகள் களம் இறங்குகின்றனர். சென்னையின் அடையாளங்களில் ஒன்றான சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு புத்துயிர் பெற்றுள்ள நிலையில், முதல் முறையாக சர்வதேச மகளிருக்கென பிரத்யேகமாக நடத்தப்படுகிறது.

    நுங்கம்பாக்கம் சர்வதேச டென்னிஸ் மைதானத்தில் இன்று முதல் வரும் 18ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன. மகளிர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் என இரு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, உக்ரைன், போலந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 32 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்த தொடரில் பங்கேற்பதற்காக 22 வீராங்கனைகள் நேரடியாக தரவரிசை மூலம் தேர்வு செய்யப்பட்டனர். இந்திய வீராங்கனைகள் அங்கிதா ரெய்னா, தாண்டியா கர்மன் உள்ளிட்ட 4 வீராங்கனைகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. மீதமுள்ள வீராங்கனைகளை தேர்வு செய்ய தகுதிச்சுற்று போட்டிகள் நடத்தப்பட்டன.

    இதில் தமிழக வீராங்கனைகள் இருவர் உட்பட, இந்திய வீராங்கனைகள் ஐந்து பேர் தகுதி சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறினர். எனினும் ஜப்பான் வீராங்கனைகள் இருவர், ஆஸ்திரேலியா, குரோஷியா, சீன தைபே, ரஷ்ய வீராங்கனைகள் வெற்றி பெற்று பிரதான சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

    இந்நிலையில் முதல் சுற்று ஆட்டங்கள் இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் கனடா வீராங்கனை புஷார்டு, சுவிஸ் வீராங்கனை சுகேருடன் பலப்பரீட்சை நடத்துகிறார். சர்வதேச தரவரிசையில் 29வது இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனையும் இந்திய முன்னாள் வீரர் விஜய் அமிர்தராஜின் சகோதரி மருமகளான அலிசன் ரிஸ்கே, ரஷ்ய வீராங்கனை அனஸ்டாசியாவை எதிர்கொள்கிறார்.

    இதையும் படிங்க: சதத்தின் பாதைக்குத் திரும்பிய ஸ்டீவ் ஸ்மித்- நியூசிலாந்துக்கு 3-0 ஒயிட்வாஷ் கொடுத்த ஆஸ்திரேலியா

    இந்திய வீராங்கனை அங்கிதா - ஜெர்மனி வீராங்கனை மரியாவுடன் மோதுகிறார். இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. மற்றொரு இந்திய வீராங்கனை தாண்டியா கர்மன், பிரான்ஸ் வீராங்கனை க்ளோவுடன் மோதவுள்ளார். போட்டியில் வெற்றி பெறும் வீராங்கனைகளுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.2 .38 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Chennai, Tennis

    அடுத்த செய்தி