Tokyo Olympics: பஜ்ரங் புனியா மல்யுத்தம் அரையிறுதிக்குத் தகுதி

அரையிறுதியில் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவு போட்டி காலிறுதியில் அபாரமாக வென்று இந்திய வீரர் பஜ்ரங் புனியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

  • Share this:
    டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவு போட்டி காலிறுதியில் அபாரமாக வென்று இந்திய வீரர் பஜ்ரங் புனியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

    ஈரான் வீரர் மோர்டேசா காசாவை இவர் 2-1 என்ற புள்ளிகளில் வீழ்த்தினார். முதலில் காசாதான் முன்னிலை வகித்தார், ஆனால் அதன்பிறகு கடும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்ட பஜ்ரங் புனியா, எதிராளியின் தாக்குதலை திறம்பட முறியடித்து வெற்றி பெற்றார்.

    அரையிறுதியில் அஜர்பெய்ஜான் மல்யுத்த வீரர் ஹாஜி அலியேவ் என்பவரை சந்திக்கிறார் பஜ்ரங் புனியா.

    முன்னதாக பஜ்ரங் புனியா - அக்மாதிலீவ் இடையே 65 கிலோ உடல் எடைப்பிரிவு ஃப்ரீ ஸ்டைல் போட்டி நடைபெற்றது இதில் பஜ்ரங் முதலில் 2 புள்ளிகள் முன்னிலை பெற்று 3-1 என்று இருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆனால் அதன் பிறகு அக்மாதிலீவ் 2 புள்ளிகள் பெற்று சமன் செய்ய ஆட்டம் 3-3 என்று சமன் ஆனது. ஆனால் நடுவர்கள் பஜ்ரங் புனியா வென்றதாக டெக்னிகல் சூப்பிரியாரிட்டி அடிப்படையில் அறிவிக்க அவர் காலிறுதிக்கு முன்னேறினார்.

    இப்போது ஈரான் வீரரை முறியடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் பஜ்ரங் புனியா
    Published by:Muthukumar
    First published: