ஒலிம்பிக் மல்யுத்தம்: பஜ்ரங் புனியா அரையிறுதியில் தோல்வி: வெண்கல வாய்ப்பு உள்ளது

பஜ்ரங் புனியா

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் 65 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தத்தில் அஜர்பெய்ஜான் வீரரிடம் இந்தியாவின் பஜ்ரங் புனியா தோல்வி தழுவினார்.

  • Share this:
    டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் 65 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தத்தில் அஜர்பெய்ஜான் வீரரிடம் இந்தியாவின் பஜ்ரங் புனியா தோல்வி தழுவினார்.

    அஜர்பெய்ஜான் வீரர் ஹாஜி அலியேவ் 12-5 என்று அரையிறுதியில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இனி ரெபஷாஜ் சுற்றில் பஜ்ரங் புனியா பங்கு பெற்று வெண்கலத்தை வெல்ல வேண்டும்.

    வெண்கலப் பதக்கச் சுற்றில் பஜ்ரங் புனியா தவ்லத் நியாஸ்பகோவிடம் மோத வேண்டும்.

    அரையிறுதியில் அஜர்பெய்ஜான் வீரர் ஹாஜி அலியேவுக்கு எதிராக வலுவாகத் தொடங்கினார் பஜ்ரங் புனியா. முதல் புள்ளியை பஜ்ரங் பெற, தாக்குதலில் இறங்கிய அலியேவ் 2 புள்ளிகளைப் பெற்றார். பிறகு ஹாஜி 4-1 என்று முன்னிலை பெற்றார்.

    அதன் பிறகுதான் முக்கியமான ஒரு உத்தியில் பஜ்ரங்கைக் கீழே தள்ளியதால் 4 புள்ளிகள் பெற்ற அலியேவ் 8-1 என்று முன்னிலை பெற்றார். பஜ்ரங் அதன் பிறகு புள்ளிகளைப் பெற ஆட்டம் 9-5 என்று அஜர்பெய்ஜான் வீரர் சார்பில் இருந்தது.

    கடைசியில் வெகுண்டு எழுந்த ஹாஜி அலியேவ் மேலும் 3 புள்ளிகளைப் பெற்று 12-5 என்று அரைஇறுதியில் வெற்றி பெற்றார்.

    இதனையடுத்து பஜ்ரங் புனியாவுக்கு வெள்ளி வாய்ப்பு முடிந்து தற்போது வெண்கலச் சுற்றில் பஜ்ரங் புனியா தவ்லத் நியாஸ்பகோவிடம் மோத வேண்டும்.
    Published by:Muthukumar
    First published: