கஜகஸ்தானின் அல்மாட்டியில் நடைபெறும் ரேங்கிங் சீரிஸ் சர்வதேச மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் அமன் தங்கம் வென்று சாதனை படைத்தார்.
கடைசி நாளான நேற்று 67 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா தனது முதலாவது சுற்றில் 3-5 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் அப்போஸ் ரக்மோனோவிடம் தோல்வியை தழுவினார். ரக்மோனோவ் இறுதிப் போட்டிக்குள் நுழைந்ததால், பஜ்ரங் பூனியாவுக்கு 'ரெபிசேஜ்' மூலம் இன்னொரு வாய்ப்பு கிடைத்தது.
இதன்படி வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் பஜ்ரங் பூனியா, கஜகஸ்தானின் ரிபட் சாய்போட்டோலோவுடன் மோதினார். எதிராளியின் கால்களை மடக்கி புள்ளிகளை சேகரித்த பஜ்ரங் பூனியா 7-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
இதன் 57 கிலோ எடைப்பிரிவில் முதல் ரவுண்டில் 15-12 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தான் வீரர் மெய்ரம்பெக் கர்ட்பேவை தோற்கடித்த இந்திய இளம் வீரர் அமன் தொடர்ந்து ஏற்றம் கண்டதுடன் திரில்லிங்கான இறுதி ஆட்டத்தில் 10-9 என்ற புள்ளி கணக்கில் மற்றொரு உள்ளூர் வீரர் மெரே பசார்பயேவை சாய்த்து தங்கப்பதக்கத்தை வென்றார்.
57 கிலோ எடைப்பிரிவில், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரவி தஹியாவுடன் சத்ரசல் மைதானத்தில் பயிற்சி பெறும் அமான், சர்வதேசப் போட்டியில் சீனியர் மட்டத்தில் தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றார்.இந்த தொடரில் இந்தியா மொத்தம் 12 பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.
அவர் 15-12 என்ற கணக்கில் மீராம்பேக் கார்ட்பேயை அதிக ஸ்கோரிங் போட்டியில் வென்றார், அதைத் தொடர்ந்து கிர்கிஸ்தானின் அப்டிமாலிக் கராச்சோவ்வை பிரமாதமாக வெற்றி பெற்றார்.
அவர் தனது இறுதிப் போட்டியில் கஜகஸ்தானின் மெரி பசார்பயேவை 10-9 என்ற கணக்கில் வீழ்த்தி ஐந்து மல்யுத்த வீரர் பிரிவில் தோற்கடிக்காமல் தங்கம் வென்றார்.இந்த சீசனில் டான் கோலோவில் வெள்ளியும், யாசர் டோகுவில் வெண்கலமும் வென்ற அமனின் மூன்றாவது பதக்கம் இதுவாகும்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.