ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

உலகக்கோப்பை ஹாக்கி தொடர் : இந்தியா – இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

உலகக்கோப்பை ஹாக்கி தொடர் : இந்தியா – இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

ஸ்பெயின் அணிக்கு எதிரான வெற்றியை கொண்டாடிய இந்திய ஹாக்கி அணி.

ஸ்பெயின் அணிக்கு எதிரான வெற்றியை கொண்டாடிய இந்திய ஹாக்கி அணி.

உலகக்கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசா மாநிலத்தில் ஜனவரி 13ஆம் தேதி தொடங்கியது. ஜனவரி 29ஆம் தேதி வரையில் இந்த தொடர் நடைபெறவுள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. இங்கிலாந்து அணி வலிமையாக இருப்பதால் இன்றைய ஆட்டம் இந்திய அணிக்கு கூடுதல் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து தனது முதல் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை 5-0 எஙனற கணக்கில் வீழ்த்தியுள்ளது. இந்தியா முதல் ஆட்டத்தில் ஸ்பெயினை 2-0 என்ற கணக்கில் வென்றது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்றிரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் உள்ள பிர்ஸா முண்டா மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. சுமார் 21 ஆயிரம் பேர் அமர்ந்து விளையாட்டை ரசிக்கும் வகையில் இந்த மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசா மாநிலத்தில் ஜனவரி 13ஆம் தேதி தொடங்கியது. ஜனவரி 29ஆம் தேதி வரையில் இந்த தொடர் நடைபெறவுள்ளது. இந்த போட்டியை நடத்தும் பெருமை இந்தியா பெற்றிருக்கிறது. இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கி இருக்கும் நிலையில், அந்த விளையாட்டின் மீதான ஆர்வம் கடந்த சில ஆண்டுகளாக இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ரூர்கேலாவின் பிர்சா முண்டா மைதானத்திலும், புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா மைதானத்திலும் இந்த போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றி 48 ஆண்டுகள் ஆகின்றன. இந்த வறட்சி இந்த உலகக்கோப்பையில் நீங்குமா என்ற எதிர்பார்ப்பில் இந்திய அணியின் ரசிகர்கள் உள்ளனர். முன்தாக 1975-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த உலகக்கோப்பை ஹாக்கி இறுதியாட்டத்தில், பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

ஒலிம்பிக்கில் இந்திய அணி 8 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. உலகக்கோப்பை ஹாக்கி தொடரை நேரடியாக ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் பெற்றிருக்கிறது. ஆன்லைனில் இந்த போட்டிகளை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் பார்த்து மகிழலாம். இந்திய அணி இந்த தொடரில் குரூப் டி பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். தலைசிறந்த ஆட்டக்காரர்கள் இந்திய அணியில் இடம்பெற்றிருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

பேக் அப் பவுலர்கள் இல்லாமல் களத்தில் இறங்கிய இந்திய அணி… துணிவான முடிவை எடுத்தாரா ரோஹித் சர்மா?

இந்திய அணியின் விபரம்-

தலைமை பயிற்சியாளர்: கிரஹாம் ரீட்

முன்கள வீரர்கள்: மந்தீப் சிங், லலித் குமார் உபாத்யாய், அபிஷேக், சுக்ஜீத் சிங்

கோல்கீப்பர்கள்: கிரிஷன் பகதூர் பதக், பிஆர் ஸ்ரீஜேஷ்

டிஃபெண்டர்கள்: ஜர்மன்பிரீத் சிங், சுரேந்தர் குமார், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), வருண் குமார், அமித் ரோஹிதாஸ் (துணை கேப்டன்), நிலம் சஞ்சீப் செஸ்

மிட்பீல்டர்கள்: மன்பிரீத் சிங், ஹர்திக் சிங், நீலகண்ட சர்மா, ஷம்ஷேர் சிங், விவேக் சாகர் பிரசாத், ஆகாஷ்தீப் சிங்

மாற்று வீரர்கள்: ராஜ்குமார் பால், ஜுக்ராஜ் சிங்

First published:

Tags: Cricket