Home /News /sports /

World Tour Finals: உலக இறுதி சுற்று பேட்மிண்டன்:இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!

World Tour Finals: உலக இறுதி சுற்று பேட்மிண்டன்:இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

World Tour Finals இறுதி போட்டியில் இந்தியாவின் சிந்து, தென்கொரிய வீராங்கனை அன் சி-யங் ஆகியோர் நாளை (டிசம்பர் 5) பலபரிட்சை நடத்தவுள்ளனர். ஏற்கனவே, வேர்ல்டு டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் தொடரில் 2018ஆம் ஆண்டு பிவி சிந்து பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    உலக இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் பி.வி. சிந்து முன்னேறினார். இறுதிப்போட்டியில்  தென்கொரிய வீராங்கனையான அன் சி -யங் உடன் சிந்து பலப்பரிட்சை நடத்தவுள்ளார்.

    உலக  பேட்மிண்டன் தரவரிசையில் ‘முதல் -8’ இடத்தில் உள்ள வீரர், வீராங்கனைகள் மட்டுமே களம் காணும் உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டி (World Tour Finals)  இந்தோனேஷியாவின்  பாலி நகரில் நடைபெற்று வருகிறது.  உலக தரவரிசையில் 7ம் இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி. சிந்துவும் இத்தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

    இதன் லீக் தொடரில் பி.வி. சிந்து முதல் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றார். கடைசி லீக் ஆட்டத்தில்  தாய்லாந்து வீராங்கனை போர்ன்பவீ சோச்சுவாங்கை எதிர்கொண்ட பி.வி.சிந்து   12-21, 21-19, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். எனினும், 2 வெற்றி ஒரு தோல்வியுடன் ஏ பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த பி.வி.சிந்து அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    அரையிறுதியில் ஜப்பான் வாராங்கனை அகானே யமாகுச்சியுடன் சிந்து பலபரிட்சை நடத்தினார். விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியில்  i 21-15 15-21 21-19 என்ற செட் கணக்கில் பி.வி. சிந்து வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றார்.  மற்றொரு அரையறுதி ஆட்டத்தில்,  தென் கொரியாவின் அன் சி யங்,  தாய்லாந்தின் போர்ன்பவீ சோச்சுவாங்கை  25-23 21-17 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.



    இறுதி போட்டியில் இந்தியாவின் சிந்து, தென்கொரிய வீராங்கனை அன் சி-யங் ஆகியோர் நாளை (டிசம்பர் 5) பலபரிட்சை நடத்தவுள்ளனர். ஏற்கனவே, வேர்ல்டு டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் தொடரில் 2018ஆம் ஆண்டு பிவி சிந்து பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: Ajaz Patel: இந்திய அணியைக் கலங்கடிக்கும் மும்பைவாலா அஜாஜ் படேல்

    Published by:Murugesh M
    First published:

    Tags: Badminton, PV Sindhu

    அடுத்த செய்தி