Home /News /sports /

உலக சாம்பியன் தங்க மங்கை கடந்து வந்த பாதை- மனம் திறக்கும் நிகத் ஜரீன்

உலக சாம்பியன் தங்க மங்கை கடந்து வந்த பாதை- மனம் திறக்கும் நிகத் ஜரீன்

உலக சாம்பியன் நிகத் ஜரீன்

உலக சாம்பியன் நிகத் ஜரீன்

மேரி கோமிடம் தோற்றது முதல் இன்றைய உலக சாம்பியன் பட்டம் வரை நிகத் ஜரீன் கடந்து வந்த கடினமான பாதை, மனம் திறக்கிறார் நிகத் ஜரீன்

  • News18
  • Last Updated :
    முன்னாள் ஜூனியர் உலக சாம்பியனும், மதிப்புமிக்க ஸ்ட்ராட்ஜா நினைவுப் போட்டியை  இரண்டு முறை வென்றவரும், பேங்க் ஆஃப் இந்தியாவில் வங்கி அதிகாரியாக பணிபுரிபவருமான புதிய உலக்குத்துச் சண்டை சாம்பியன், இந்தியாவின் தங்க மங்கை நிகத் ஜரீன்,  எம்.சி. மேரி கோம், சரிதா, தேவி, ஜென்னி ஆர்.எல் மற்றும் லேகா கே.சி. போன்ற இந்திய ஜாம்பவான்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி தங்கத்தை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வந்தார்.

    தெலுங்கானாவைச் சேர்ந்த நிகத் ஜரீன் தாய்லாந்தின் ஜுடாமஸ் ஜிட்பாங் என்பவரை 5-0 என்று இறுதிப் போட்டியில் ஊதித்தள்ளி வரலாறு படைத்தார். ஜுடாமஸ் சாதாரண வீராங்கனை அல்ல டோக்கியோ ஒலிம்பிக்ஸில் காலிறுதி வரை வந்தவர்.
    தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர் நிகத் ஜரீன். இதில் இஸ்லாமியத்தின் மதக்கொள்கைகள் மற்றும் பாக்சிங் பெண்களுக்கு சரிவராது போன்ற இறுகிய மனோபாவங்களை எதிர்த்துப்போராடி வெற்றி மங்கையாகியுள்ளார்.

    “பாக்சிங் பெண்களுக்கு ஆகாது போன்ற நம்பிக்கைகள், தடைகளை கடந்து வர போராடினேன். என் முகத்துக்கோ அழகுக்கோ எந்த கேடும் வராது என்று கூறி அனைவரையும் திருப்தி படுத்தினேன்.
    இன்னும் என் தந்தையின் குரல் என்னுள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ’பாக்சிங் என்பது ஆண்களுக்கான ஆட்டம் என்றே சமூகம் நினைக்கிறது, இது பெண்களுக்கான விளையாட்டு அல்ல என்று சமுதாயம் நினைக்கிறது’ என்றார் என் தந்தை.

    ஆனால் இதையே என் சவாலாக மாற்றினேன்.  ஆணாயிருந்தால் என்ன, பெண்ணாயிருந்தால் என்ன, பாக்சிங்கிற்கு இதிலெல்லாம் அக்கறை இல்லை என்று மனதில் உறுதி பூண்டேன். பாக்சிங் என்னைப் பொறுத்தவரை எனக்கு ஒரு அணுகுமுறையையும் மனோபாவத்தையும் வளர்க்கும் விளையாட்டு, என்னுடைய பெருமையை நினைவூட்டும் ஒரு விளையாட்டு” என்றார் ஜரீன்.

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் எந்த வித சோதனை ஓட்டமும் இல்லாமல் மேரி கோமை மட்டும் தேர்வு செய்தது ஜரீனை சற்றே சோர்வடையச் செய்தது. ஆனால் இவர் விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் விஷயத்தைக் கொண்டு சென்றார். விஷயங்கள் அதன் பிறகு சரியானது. ஆனால் சோதனைப் போட்டியில் மேரி கோம் ஜரீனுக்கு எதிரான ஆட்டத்தில் அவரை வீழ்த்தி மேரி கோம் தான் ஒலிம்பிக்கிற்கு சரியான தேர்வு என்பதை நியாயப்படுத்தினார்.

    ஆனால் மேரி கோமுக்கும் ஜரீனுக்கும் எந்த வித கசப்பும் இல்லை, மாறாக இந்த சிஸ்டம் தான் ஜரீனின் சவால். ஆனால் ஒலிம்பிக் தகுதி பெறாத ஒன்றையே தனக்கான உத்வேகமாக மாற்றினார். இன்று பெண்கள் உலக குத்துச் சண்டை சாம்பியன் என்று நம் முன் தங்கப்பதக்கத்துடன் நிற்கிறார்.

    உலக சாம்பியன் ஆனதற்கு கடந்து வந்த வெற்றி பாதை:

    காலிறுதிக்கு முந்தைய சுற்று:  மெக்சிகோவின் ஹெரேரா அல்வாரெஸை (5-0) வீழ்த்தினார்.

    காலிறுதி:  நிகத் ஜரீன் இங்கிலாந்தின் சார்லி-சியான் டேவிசனை (5-0) வீழ்த்தினார்.

    அரையிறுதி:  நிகத் ஜரீன் பிரேசிலின் கரோலின் டி அல்மேடாவை (5-0) வீழ்த்தினார்.

    இறுதிப் போட்டி:  நிகத் ஜரீன் தாய்லாந்தின் ஜூடாமாஸ் ஜிட்பாங்கை (5-0) தோற்கடித்தார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: World Boxing Championship

    அடுத்த செய்தி