முகப்பு /செய்தி /விளையாட்டு / World Cup qualifiers கால்பந்து: மெஸ்ஸியின் அர்ஜெண்டினாவை மிரட்டிய கொலம்பியா: த்ரில் ஆட்டம் 2-2 என டிரா

World Cup qualifiers கால்பந்து: மெஸ்ஸியின் அர்ஜெண்டினாவை மிரட்டிய கொலம்பியா: த்ரில் ஆட்டம் 2-2 என டிரா

செவ்வாய் நள்ளிரவு நடைபெற்ற உலகக்கோப்பைக் கால்பந்து தகுதிச் சுற்று ஆட்டத்தில் அர்ஜெண்டினா, கொலம்பியா அணிகள் மோதின. செம த்ரில்லிங்கான இந்த ஆட்டம் கொலம்பியாவின் கடைசி விநாடி  கோலினால்  2-2 என்று டிரா ஆனது.

செவ்வாய் நள்ளிரவு நடைபெற்ற உலகக்கோப்பைக் கால்பந்து தகுதிச் சுற்று ஆட்டத்தில் அர்ஜெண்டினா, கொலம்பியா அணிகள் மோதின. செம த்ரில்லிங்கான இந்த ஆட்டம் கொலம்பியாவின் கடைசி விநாடி  கோலினால்  2-2 என்று டிரா ஆனது.

செவ்வாய் நள்ளிரவு நடைபெற்ற உலகக்கோப்பைக் கால்பந்து தகுதிச் சுற்று ஆட்டத்தில் அர்ஜெண்டினா, கொலம்பியா அணிகள் மோதின. செம த்ரில்லிங்கான இந்த ஆட்டம் கொலம்பியாவின் கடைசி விநாடி  கோலினால்  2-2 என்று டிரா ஆனது.

  • Last Updated :

கடந்த வாரம் சிலி அணிக்கு எதிராக அர்ஜெண்டினா 1-1 என்று டிரா ஆனது. அந்த அணியிலிருந்து 5 வீரர்களை மாற்றினார் அர்ஜெண்டினா பயிற்சியாளர் லியோனல் ஸ்கேலோனி.

ஆட்டம் தொடங்கி 3வது நிமிடத்தில் தன் 2வது சர்வதேச கால்பந்து போட்டியில் ஆடும் அர்ஜெண்டினாவின் கிறிஸ்டியன் ரொமீரோ ஃப்ரீ கிக் ஷாட்டை தலையால் முட்டி முதல் கோலை அடித்து 1-0 என்று முன்னிலை அளித்தார்.

இதற்கு 5 நிமிடங்கள் சென்று லியாண்டர் பரேடீஸ் கொலம்பியாவின் வலுவான தடுப்பு வீரர்களைக் கடைந்து பரபரவென பந்தை எடுத்து உள்ளே புகுந்து கோலாக மாற்ற முதல் 10 நிமிடங்களிலேயே அர்ஜெண்டினா அணி 2-0 என்று முன்னிலை வகித்தது.

அர்ஜெண்டினா முதல் பாதியில் பெரும்பாலும் கட்டுப்பாட்டில் இருந்தாலும் முதல் பாதி முடியும் தறுவாயில் கோல் வாசலில் ஏற்பட்ட மோதல் காரணமாக தலையில் அடிப்பட்டு அர்ஜெண்டினா கோல் கீப்பர் எமிலியானோ மார்ட்டினேஸ் ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப்பட்டார்.

Also Read: Euro 2020: வார்ம்- அப் போட்டியில் கிரீஸ்மேனின் அபார பைசைக்கிள் கிக் கோல்- பல்கேரியாவை பந்தாடிய பிரான்ஸ்

இடைவேளைக்குப் பிறகு கொலம்பிய அணி கடும் நெருக்கடி கொடுத்தது, படு ஆக்ரோஷமான ஆட்டத்தில் யுவான் குவாடிராடோ அர்ஜெண்டினாவை கதிகலக்கினார். லூயிஸ் முரியல், துவான் ஸபாட்டா இருவரும் கோல் வாய்ப்பை நழுவ விட்டனர்.

நெருக்கடி அதிகரிக்க அர்ஜெண்டினா வீரர் நிகோலஸ் ஓட்டாமெண்டி பிரஷர் தாங்க முடியாமல் கொலம்பிய வீரர் மேட்டியஸ் யுரைபியை கீழே தள்ள அது பெனால்டி ஏரியாவானதால் பெனால்டி கிக் கொலம்பியாவுக்கு கிடைத்தது. அதை லூயிஸ் முரியல் கோலாக மாற்ற 2-1 என்று ஆனது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

லியோனல் மெஸ்ஸி இருமுறை மேற்கொண்ட தாக்குதல் முயற்சியை கொலம்பிய கோல் கீப்பர் டேவிட் ஆஸ்பினா பிரமாதமாகத் தடுத்து விட்டார். டேவிட் ஆஸ்பினா ஒரு கிரேட் கோல் கீப்பர் என்று அர்ஜெண்டினாவின் ரோட்ரிகோ டி பால் என்பவரே புகழ்ந்து விட்டார்.

எப்படியோ கொலம்பிய தாக்குதல்களை சமாளித்து ஆட்டம் 90 நிமிடங்கள் கடந்து ஸ்டாப்பேஜ் டைம் 4 நிமிடங்களுக்குள் சென்ற போது கொலம்பிய வீரர் யுவான் குவாட்ராடோ பிரமாதமாக ஒரு கிராஸ் ஷாட்டை ஆட பதிலி வீரர் மிகுயெல் போரியா அதை தலையால் முட்டி கோலாக மாற்றினார். ஆட்டம் டிரா ஆனது.

அர்ஜெண்டினா ஜெயித்திருக்க வேண்டிய இந்த ஆட்டத்தில் கொலம்பிய கோல் கீப்பர் ஆஸ்பினோ 6 முறை கோலைத் தடுத்தார், மாறாக அர்ஜெண்டினா கோல் கீப்பர் 3 சேவ்களையே செய்ய முடிந்தது.

இரு அணிகளுமே 4 தடுப்பணை வீரர்கள், 3 நடுக்கள வீரர்கள் 3 முன்கள வீரர்கள் என்ற உத்தியில் மோதியதால் ஆட்டம் விறுவிறுப்பாக அமைந்தது.

top videos

    புள்ளிகள் அட்டவணையில் பிரேசில் 18 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்க 12 புள்ளிகளுடன் அர்ஜெண்டினா 2ம் இடத்தில் உள்ளது. கொலம்பியா 7 புள்ளிகளுடன் 6ம் இடத்தில் உள்ளது.

    First published:

    Tags: Argentina