ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஒடிசாவில் நடைபெறும் உலகக்கோப்பை ஹாக்கி தொடர்… நேரலையாக எதில் பார்க்கலாம்?

ஒடிசாவில் நடைபெறும் உலகக்கோப்பை ஹாக்கி தொடர்… நேரலையாக எதில் பார்க்கலாம்?

உலகக்கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசாவில் நடைபெறுகிறது

உலகக்கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசாவில் நடைபெறுகிறது

இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். தலைசிறந்த ஆட்டக்காரர்கள் அணியில் உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகக்கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசா மாநிலத்தில் ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி ஜனவரி 29ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியை நடத்தும் பெருமை இந்தியா பெற்றிருக்கிறது. இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கி இருக்கும் நிலையில், அந்த விளையாட்டின் மீதான ஆர்வம் கடந்த சில ஆண்டுகளாக இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ரூர்கேலாவின் பிர்சா முண்டா மைதானத்திலும், புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா மைதானத்திலும் இந்த போட்டிகள் நடைபெறுகிறது.

உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றி 48 ஆண்டுகள் ஆகின்றன. இந்த வறட்சி இந்த உலகக்கோப்பையில் நீங்குமா என்ற எதிர்பார்ப்பில் இந்திய அணியின் ரசிகர்கள் உள்ளனர். முன்தாக 1975-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த உலகக்கோப்பை ஹாக்கி இறுதியாட்டத்தில், பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

ஒலிம்பிக்கில் இந்திய அணி 8 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. உலகக்கோப்பை ஹாக்கி தொடரை நேரடியாக ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் பெற்றிருக்கிறது. ஆன்லைனில் இந்த போட்டிகளை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் பார்த்து மகிழலாம்.

இந்திய அணி இந்த தொடரில் குரூப் டி பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். தலைசிறந்த ஆட்டக்காரர்கள் இந்திய அணியில் இடம்பெற்றிருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட்கோலி சதம்… இந்தியா 373 ரன்கள் குவிப்பு

மொத்தம் 4 பிரிவுகளாக 16 அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.

குரூப் ஏ: ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ், தென் ஆப்பிரிக்கா

குரூப் பி: பெல்ஜியம், ஜெர்மனி, தென் கொரியா, ஜப்பான்

குரூப் சி: நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா, சிலி

குரூப் டி: இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ்

கலர்ஸ் தமிழ் SA20 லீக் : அபினவ் முகுந்த் உடன் அறிமுக வர்ணனையாளராக கால்பதிக்கும் அனிருதா ஸ்ரீகாந்த்

இந்திய அணியின் விபரம்-

தலைமை பயிற்சியாளர்: கிரஹாம் ரீட்

முன்கள வீரர்கள்: மந்தீப் சிங், லலித் குமார் உபாத்யாய், அபிஷேக், சுக்ஜீத் சிங்

கோல்கீப்பர்கள்: கிரிஷன் பகதூர் பதக், பிஆர் ஸ்ரீஜேஷ்

டிஃபெண்டர்கள்: ஜர்மன்பிரீத் சிங், சுரேந்தர் குமார், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), வருண் குமார், அமித் ரோஹிதாஸ் (துணை கேப்டன்), நிலம் சஞ்சீப் செஸ்

மிட்பீல்டர்கள்: மன்பிரீத் சிங், ஹர்திக் சிங், நீலகண்ட சர்மா, ஷம்ஷேர் சிங், விவேக் சாகர் பிரசாத், ஆகாஷ்தீப் சிங்

மாற்று வீரர்கள்: ராஜ்குமார் பால், ஜுக்ராஜ் சிங்

First published:

Tags: World Cup Hockey 2023