2023 ஆண்டு ஹாக்கி உலகக் கோப்பை தொடரை இந்தியா நடத்துகிறது. அடுத்த மாதம் ஜனவரி 13 முதல் 29 ஆம் தேதி வரை ஒடிசா மாநிலத்தில் ஹாக்கி உலக கோப்பை போட்டி நடைபெற உள்ளது. இதையொட்டி, ஹாக்கி கோப்பையை நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மும்பையில் இருந்து விமானம் மூலம் ஹாக்கி கோப்பை இன்று காலை சென்னை கொண்டுவரப்பட்டது. விமான நிலையத்தில் ஹாக்கி கோப்பையை தமிழ்நாடு ஹாக்கி சங்கத் தலைவர் ஜான் மனோகரன் பெற்று கொண்டார். தொடர்ந்து ஹாக்கி விளையாட்டு வீரர்கள் கோப்பையுடன் வாகனத்தில் தலைமைச் செயலகத்திற்கு சென்றனர்.
Also Read : 2023 ஐ.பி.எல். மினி ஏலம் : எப்போது, எங்கு நடைபெறும்? எதில் பார்க்கலாம்?
உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் கோப்பையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஹாக்கி விளையாட்டு சங்கப் பிரதிநிதிகள் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
ஒடிசா மாநிலம், புவனேஷ்வர் - ரூர்கேலாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை ஹாக்கி போட்டியின் கோப்பையை, தமிழ்நாடு ஹாக்கி விளையாட்டு சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர். pic.twitter.com/cvlD8v6XRm
— CMOTamilNadu (@CMOTamilnadu) December 21, 2022
அதனைத் தொடர்ந்து இன்று மாலை எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கோப்பை வெளியிட்டு விழா நடைபெற உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hockey, World Cup Hockey 2023