ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

உலகக்கோப்பை ஹாக்கி : பெனால்டி ஷூட்டில் அர்ஜென்டினாவை வென்று காலிறுதிக்குள் நுழைந்தது தென் கொரியா

உலகக்கோப்பை ஹாக்கி : பெனால்டி ஷூட்டில் அர்ஜென்டினாவை வென்று காலிறுதிக்குள் நுழைந்தது தென் கொரியா

வெற்றியைக் கொண்டாடும் தென்கொரிய வீரர்கள்

வெற்றியைக் கொண்டாடும் தென்கொரிய வீரர்கள்

49 மற்றும் 55 ஆவது நிமிடங்களில் கிடைத்த பெனால்டி கார்னரை அற்புதமாக பயன்படுத்தி தென்கொரிய வீரர்கள் கோலாக மாற்றினர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் நேற்று நடந்த அர்ஜன்டினா மற்றும் தென் கொரியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்தப் போட்டியில் கடுமையாக போராடிய தென்கொரிய அணி அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சியை கொடுத்து காலிறுதிக்குள் நுழைந்துள்ளது. உலகக்கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இவை 4 குழுக்களாக ஏ,பி,சி,டி என பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்கள் நடத்தப்பட்டன.

லீக் போட்டியில் குரூப்களில் முதலிடம்பிடித்த ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, இங்கிலாந்து, பெல்ஜியம் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு சென்றன. இதையடுத்து 2 மற்றும் 3ஆம் இடங்களைப் பிடித்த அணிகளுக்கு இடையே கிராஸ் ஓவர் மேட்ச் நடத்தப்பட்டது. இதில் நியூசிலாந்து, ஸ்பெயின், ஜெர்மனி அணிகள் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றன. கடைசி கிராஸ் ஓவர் ஆட்டத்தில் அர்ஜென்டினா – தென்கொரியா அணிகள் மோதின. புவனேஸ்வரம் கலிங்கா மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதல் கால் நேரத்தில் அர்ஜென்டினா 1 கோல் அடித்து முன்னிலை பெற்றது. அடுதத கால்  நேரத்தில் இரு அணிகளும் அதிரடியாக விளையாடி தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் 3-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா முன்னிலை பெற்றது.

மூன்றாவது கால் பகுதியிலும் இரு அணிகள் தலா 1 கோல் அடித்த நிலையில் ஆட்டம் தொடர்ந்து 4-3 என அர்ஜெடினா பக்கம் இருந்தது. ஆட்டத்தின் 46ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினா மேலும் ஒரு கோல் அடித்து 5-3 என முன்னிலை பெற்றது. இதனால் அர்ஜெடினா வெற்றி பெறும் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 49 மற்றும் 55 ஆவது நிமிடங்களில் கிடைத்த பெனால்டி கார்னரை அற்புதமாக பயன்படுத்தி தென்கொரிய வீரர்கள் கோலாக மாற்றினர். இதனால் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 5-5 என சமநிலை பெற்றனர். இதைத் தொடர்ந்து நடந்த பெனால்டி ஷூட் அவுட்டில் தென்கொரிய அணி 3-2  என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது. நாளை மாலை 4.30 க்கு நடைபெறும் காலிறுதியில் நெதர்லாந்தை தென்கொரியா எதிர்கொள்கிறது.

First published:

Tags: World Cup Hockey 2023