ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

உலகக்கோப்பை ஹாக்கி : நாக் அவுட் மேட்ச்சில் நியூசிலாந்தை எதிர்கொள்ளும் இந்திய அணி

உலகக்கோப்பை ஹாக்கி : நாக் அவுட் மேட்ச்சில் நியூசிலாந்தை எதிர்கொள்ளும் இந்திய அணி

வேல்ஸ் அணியுடனான ஆட்டத்தில் இந்திய அணி.

வேல்ஸ் அணியுடனான ஆட்டத்தில் இந்திய அணி.

குரூப் டி பிரிவில் இந்தியாவும் இங்கிலாந்தும் 2 வெற்றி மற்றும் ஒரு டிரா என சமமாக இருந்தாலும், கோல் கணக்கின் அடிப்படையில் இங்கிலாந்து முதலிடத்தை பிடித்து காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் நாளை நடைபெறவுள்ள நாக் அவுட் மேட்ச்சில் வலுவான நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது. இதில் தோல்வி அடையும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறாது என்பதால் இந்தப் போட்டி மிகந்த பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகக்கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரம் மற்றும் ரூர்கேலாவில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் லீக் ஆட்டங்கள் முடிவுக்கு வந்துள்ள  நிலையில் ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் காலிறுதி சுற்றுக்கு நேரடியாக முன்னேறி விட்டன.

மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் ஏ,பி,சி,டி என 4 பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற வைக்கப்பட்டுள்ளன. இந்தியா குரூப் டி-யில் உள்ளது. இதில் முதல் போட்டியில் ஸ்பெயின் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற இந்தியா, அடுத்ததாக இங்கிலாந்துடன் நடந்த போட்டியை 2-2 என டிரா செய்தது. இதையடுத்து குரூப்பில் முதலிடத்தை பிடிக்கும் அணிக்காக நடந்த ஆட்டத்தில் வேல்ஸ் அணியை 4-2 என்ற கணக்கில் இந்தியா வீழ்த்தியது.

குரூப் டி பிரிவில் இந்தியாவும் இங்கிலாந்தும் 2 வெற்றி மற்றும் ஒரு டிரா என சமமாக இருந்தாலும், கோல் கணக்கின் அடிப்படையில் இங்கிலாந்து முதலிடத்தை பிடித்து காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெற்றது. இதையடுத்து கிராஸ் ஓவர் போட்டியில் இந்தியா நாளை நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணியளவில் புவனேஸ்வரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி காலிறுதிக்குள் நுழைந்து பெல்ஜியம் அணியுடன் மோதும். தோல்வி அடையும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் கிளாசிஃபிகேஷன் பிரிவுக்கு சென்று விடும்.

அதாவது குரூப்பில் 3ஆவது இடத்தை பிடிக்கும் அணிகளும், கிராஸ் ஓவரில் தோல்வி அடையும் அணிகளும் கிளாசிஃபிகேஷன் பிரிவில் மோதுகின்றன. தற்போதைய சூழலில் நாளை நடைபெறும் போட்டியில் நியூசிலாந்தை வென்று இந்தியா காலிறுதிக்கு செல்லுமா என்ற எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள் உள்ளனர்.

First published:

Tags: World Cup Hockey 2023