ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் தென்கொரியாவை பந்தாடிய நெதர்லாந்து… அரையிறுதிக்கு முன்னேற்றம்

உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் தென்கொரியாவை பந்தாடிய நெதர்லாந்து… அரையிறுதிக்கு முன்னேற்றம்

நெதர்லாந்து அணி

நெதர்லாந்து அணி

உலகக்கோப்பை ஹாக்கி அரையிறுதிப் போட்டிக்கு நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் தென் கொரியா அணியை வீழ்த்தி நெதர்லாந்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 16 அணிகள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெற்ற அணிகள் நேரடியாக காலிறுதிக்கு முன்னேறின. அந்த வகையில் ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து, இங்கிலாந்து அணிகள் நேரடியாக காலிறுதிக்கு சென்றன. கிராஸ் ஓவர் சுற்றில் ஸ்பெயின், நியூசிலாந்து, தென்கொரியா, ஜெர்மனி அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

நேற்று நடந்த முதல் காலிறுதியில் ஸ்பெயினை வென்று ஆஸ்திரேலியாவும், 2ஆவது காலிறுதியில் நியூசிலாந்தை தோற்கடித்து பெல்ஜியம் அணியும் அரையிறுதிக்கு முன்னேறின. இன்று நடந்த 3 ஆவது காலிறுதி போட்டியில் வலுவான இங்கிலாந்தை வெளியேற்றி ஜெர்மனி அரையிறுதிக்குள் நுழைந்தது. இதையடுத்து 4 ஆவது காலிறுதி போட்டி நெதர்லாந்து – தென்கொரியா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. கிராஸ் ஓவர் சுற்றில் வலுவான அர்ஜென்டினா அணியை தென்கொரியா வென்றதால் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

முதல் கால் பகுதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2ஆவது கால் பகுதியில் நெதர்லாந்து அணியின் பிரிங்க்மேன் கொடுத்த பாஸை, பிஜென் கோலாக மாற்றி 1-0 என்ற கணக்கில் அணியை முன்னிலை பெறச் செய்தார். 3 ஆவது கால் பகுதியில் பிஜென் மேலும் ஒருகோலை அடித்தார். அடுத்த சில நிமிடங்களில் கிம் ஜேயான்ஸ் அற்புதமாக மற்றொரு கோலை அடிக்க, 3-0 என்ற கணக்கில் நெதர்லாந்து மேலும் முன்னிலை பெற்றது. கடைசி கால் நேர பகுதியில் நெதர்லாந்து 2 கோல்களும், தென்கொரியா 1 கோலும் அடிக்க, ஆட்டம் 5-1 என்ற கணக்கில் முடிவடைந்து நெதர்லாந்து வெற்றியை பறித்தது. நேற்று மற்றும் இன்றைய ஆட்டங்களின் முடிவில் உலகக்கோப்பை ஹாக்கி அரையிறுதிப் போட்டிக்கு நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

First published:

Tags: World Cup Hockey 2023