ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

உலகக்கோப்பை ஹாக்கி தொடர் : அடுத்த சுற்றுக்கு செல்லுமா இந்திய அணி? நாளை வேல்ஸுடன் மோதல்

உலகக்கோப்பை ஹாக்கி தொடர் : அடுத்த சுற்றுக்கு செல்லுமா இந்திய அணி? நாளை வேல்ஸுடன் மோதல்

இந்திய ஹாக்கி அணி

இந்திய ஹாக்கி அணி

குரூப் டியில் இடம்பெற்றிருக்கும் இந்திய அணி 2 ஆட்டங்களின் அடிப்படையில் தற்போது 2 ஆவது இடத்தில் உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகக்கோப்பை ஹாக்கி தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நாளை முக்கிய ஆட்டத்தில் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால், அடுத்த சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கி இருந்து வருகிறது. இதன் மீதான ஆர்வம் இளைஞர்கள் மத்தியில் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. ஹாக்கி உலகக்கோப்பை தொடரை ஒடிசா மாநிலம் நடத்தி வருகிறது. அங்கு புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ரூர்கேலாவின் பிர்சா முண்டா மைதானத்திலும், புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா மைதானத்திலும் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன.

உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றி 48 ஆண்டுகள் ஆகின்றன. இந்த வறட்சி இந்த உலகக்கோப்பையில் நீங்குமா என்ற எதிர்பார்ப்பில் இந்திய அணியின் ரசிகர்கள் உள்ளனர். முன்தாக 1975-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த உலகக்கோப்பை ஹாக்கி இறுதியாட்டத்தில், பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி டி பிரிவில் இடம்பெற்றுள்ளது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை வீழ்த்தியது. இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தை இந்திய அணி டிரா செய்தது. இந்தப் போட்டியில் இரு அணிகளும் தலா 2 கோல்களை அடித்துள்ளன. இந்த போட்டியை தொடர்ந்து நாளை நடைபெறவுள்ள போட்டியில் வேல்ஸ் அணிக்கு எதிராக இந்தியா விளையாடுகிறது.

குரூப் டியில் இடம்பெற்றிருக்கும் இந்திய அணி 2 ஆட்டங்களின் அடிப்படையில் தற்போது 2 ஆவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் வேல்ஸ் அணியுடன் இந்தியா மோதுகிறது. இதில் வெற்றி பெற்றால் இந்திய அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும் என்பதால் நாளைய ஆட்டம் மிகுந்த விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புவனேஸ்வரத்தில் நாளை நடைபெறும் இந்த போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

First published:

Tags: Hockey, World Cup Hockey 2023