ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

உலகக்கோப்பை ஹாக்கி : காலிறுதியில் நியூசிலாந்து உடன் மோதும் பெல்ஜியம்

உலகக்கோப்பை ஹாக்கி : காலிறுதியில் நியூசிலாந்து உடன் மோதும் பெல்ஜியம்

நடப்பு சாம்பியன் பெல்ஜியம் அணி.

நடப்பு சாம்பியன் பெல்ஜியம் அணி.

9 முதல் 16 இடங்களுக்கான கிளாசிபிகேஷன் மேட்ச்சில் ஜப்பான் மற்றும் இந்திய அணிகள் 26ஆம்தேதி மோதுகின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒடிசாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுகள் முடிந்து கிராஸ் ஓவர் சுற்றுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் நாளை நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான பெல்ஜியம் அணியுடன் நியூசிலாந்து அணி மோதுகிறது. நியூசிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் முதல் 45 நிமிடங்களுக்கு இந்தியாவின் கையே ஓங்கிக் காணப்பட்டது.

அடுத்து சுதாரித்து விளையாடிய நியூசிலாந்து வீரர்கள் ஆட்டத்தின் 4ஆவது கால் பகுதியில் ஒரு கோல் அடித்து 3-3 என சமநிலைப் படுத்தினர். பெனால்டி ஷூட் அவுட்டில் நியூசிலாந்து தொடர்ந்து அதிரடி காட்ட 5-4 என்ற கணக்கில் இந்திய அணி வெளியேற்றப்பட்டது. ஹாக்கி போட்டிகளில் வலிமை குறைந்ததாக கருதப்படும் நியூசிலாந்து அணி உலகக்கோப்பை தொடரில் அதிரடி காட்டி வருகிறது. இந்திய அணியை வென்றிருப்பது மன ரீதியில் நியூசிலாந்து வீரர்களுக்கு பாசிடிவாக அமையும். அதே நேரம் கடைசி போட்டியில் பெல்ஜியம் அணி ஜப்பானை 7-1 என்ற கணக்கில் ஊதித் தள்ளியது.

இந்நிலையில் பெல்ஜியம் – நியூசிலாநது அணிகள் மோதும் ஆட்டம் புவனேஸ்வரத்தில் நாளை மாலை 7 மணிக்கு ஆரம்பம் ஆகிறது. இதற்கு முன்பாக நடைபெறும் முதல் கால் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி மாலை 4.30 மணியளவில் புவனேஸ்வரத்தில் நடைபெறுகிறது. இதற்கிடையே 9 முதல் 16 இடங்களுக்கான கிளாசிபிகேஷன் மேட்ச்சில் ஜப்பான் மற்றும் இந்திய அணிகள் 26ஆம்தேதி மோதுகின்றன. இந்த போட்டி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.

First published:

Tags: World Cup Hockey 2023