முகப்பு /செய்தி /விளையாட்டு / உலகக்கோப்பை ஹாக்கி : 3 ஆவது இடத்திற்கான போட்டியில் ஆஸ்திரேலியா – நெதர்லாந்து அணிகள் நாளை மோதல்

உலகக்கோப்பை ஹாக்கி : 3 ஆவது இடத்திற்கான போட்டியில் ஆஸ்திரேலியா – நெதர்லாந்து அணிகள் நாளை மோதல்

ஆஸ்திரேலிய ஹாக்கி அணி

ஆஸ்திரேலிய ஹாக்கி அணி

இறுதிப் போட்டிக்கு நடப்பு சாம்பியனான பெல்ஜியம் மற்றும் ஜெர்மனி அணிகள் முன்னேறியுள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் 3 ஆவது இடத்திற்கான போட்டியில் ஆஸ்திரேலியா- நெதர்லாந்து அணிகள் நாளை மோதுகின்றன. அரையிறுதியில் இரு அணிகளும் தோல்வி அடைந்த நிலையில் நாளை 3 ஆவது இடத்திற்கான போட்டி புவனேஸ்வர் கலிங்கா மைதானத்தில் நடைபெறுகிறது. உலக கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலா ஆகிய நகரங்களில் கடந்த 13ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் மொத்தம் 16 அணிகள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டியில் பங்கேற்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு குழுவிலும் முதலிடம் பெற்ற அணி நேரடியாக காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்த அணிகள் கிராஸ் ஓவர் சுற்று மூலமாக தங்களது பலத்தை நிரூபித்து காலிறுதிக்கு முன்னேறி. இங்கிலாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, தென்கொரியா மற்றும் ஸ்பெயின் ஆகிய அணிகள் கால் இறுதி போட்டியில் விளையாடின.

ஆஸ்திரேலியா, பெல்ஜியம், ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இந்நிலையில் நேற்று நடந்த அரையிறுதிச் சுற்றில் ஜெர்மனி, ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 4 - 3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி ஜெர்மனி உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு ஐந்தாவது முறையாக தகுதி பெற்றது. முதல் 2 கால் பகுதியில் ஆஸ்திரேலிய அணி 2 கோல்கள் அடித்து முன்னிலையில் இருந்தது. அந்த நேரத்தில் ஜெர்மனி எந்த ஒரு கோலையும் அடிக்கவில்லை. அதன் பின்னர் ஆட்டத்தில் 43, 52, 59மற்றும் 60 ஆகிய நிமிடங்களில் ஜெர்மனி அணியினர் அடுத்தடுத்து கோல்களை அடித்து ஆஸ்திரேலியாவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தனர். ஆஸ்திரேலிய அணிக்கு 58 ஆவது நிமிடத்தில் ஒரு கோல் கிடைத்தது. இதன் மூலம் 4-3 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி வெற்றி பெற்றது.

இதேபோன்று நேற்று நடந்த மற்றொரு அரையிறுதியில் பெல்ஜியம், நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டம் 2க்கு 2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் பெனால்டி ஷூட் அவுட் நடத்தப்பட்டது. இதில் 3க்கு 2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அரையிறுதியில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் தோல்வி அடைந்த நிலையில், 3 ஆவது இடத்திற்கான போட்டியில் நாளை இந்த அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி நாளை மாலை 4.30 மணியளவில் புவனேஸ்வர் கலிங்கா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

First published:

Tags: World Cup Hockey 2023