ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

உலகக்கோப்பை ஹாக்கி : இந்திய அணியின் மிட் ஃபீல்டர் ஹர்திக் சிங்கிற்கு காயம்… தொடரில் நீடிப்பாரா?

உலகக்கோப்பை ஹாக்கி : இந்திய அணியின் மிட் ஃபீல்டர் ஹர்திக் சிங்கிற்கு காயம்… தொடரில் நீடிப்பாரா?

ஹர்திக் சிங்

ஹர்திக் சிங்

டி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி புள்ளி பட்டியலில் இங்கிலாந்துக்கு அடுத்ததாக 2ஆவது இடத்தில் உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகக்கோப்பை ஹாக்கி தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணியின் மிட் ஃபீல்டர் ஹர்திக் சிங்கிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து எம்.ஆர்.ஐ. ஸ்கேனுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் தொடரில் நீடிப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கி இருந்து வருகிறது. இதன் மீதான ஆர்வம் இளைஞர்கள் மத்தியில் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. ஹாக்கி உலகக்கோப்பை தொடரை ஒடிசா மாநிலம் நடத்தி வருகிறது. அங்கு புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ரூர்கேலாவின் பிர்சா முண்டா மைதானத்திலும், புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா மைதானத்திலும் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன.

உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றி 48 ஆண்டுகள் ஆகின்றன. இந்த வறட்சி இந்த உலகக்கோப்பையில் நீங்குமா என்ற எதிர்பார்ப்பில் இந்திய அணியின் ரசிகர்கள் உள்ளனர். முன்தாக 1975-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த உலகக்கோப்பை ஹாக்கி இறுதியாட்டத்தில், பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி டி பிரிவில் இடம்பெற்றுள்ளது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை வீழ்த்திய நிலையில் நேற்று முன்தினம் நடந்த 2ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணியுடன் மோதியது. இதில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

இந்த போட்டியின்போது இந்திய அணியின் மிட் ஃபீல்டர் ஹர்திக் சிங்கிற்கு தொடைப் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இவர் முக்கிய ஆட்டக்காரர் என்பதால் அணியில் ஹர்திக் சிங் இடம்பெற வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர். இந்நிலையில் இன்று அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையின் முடிவில்தான் அவர் தொடரில் நீடிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

First published:

Tags: World Cup Hockey 2023