ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

World Cup Hockey : காலிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது ஜெர்மனி

World Cup Hockey : காலிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது ஜெர்மனி

பரபரப்பான ஆட்டத்தில் ஜெர்மனி - இங்கிலாந்து வீரர்கள்

பரபரப்பான ஆட்டத்தில் ஜெர்மனி - இங்கிலாந்து வீரர்கள்

தற்போது வரை பெல்ஜியம், ஆஸ்திரேலியா அணிகளைத் தொடர்ந்து ஜெர்மனியும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் இன்று நடைபெற்ற 3ஆவது காலிறுதி போட்டியில் வலுவான இங்கிலாந்து அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தி ஜெர்மனி அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 3ஆம் கால் நேரம் வரையில் இங்கிலாந்து அணியின் கை ஓங்கிக் காணப்பட்டது. கடைசி கால் பகுதி நேரத்தில் சிலிர்த்தெழுந்த ஜெர்மனி அதிரடியாய் 2 கோல்கள் அடிக்க ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டிற்கு சென்றது. ஒடிசாவில் நடந்து வரும் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. லீக் மற்றும் கிராஸ் ஓவர் சுற்றுகள் முடிந்த நிலையில், காலிறுதி போட்டிகள் நேற்று தொடங்கின. முதல் காலிறுதி போட்டியில் ஸ்பெயின் அணியை வென்று ஆஸ்திரேலியாவும், 2 ஆவது காலிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வெளியேற்றி நடப்பு சாம்பியன் பெல்ஜியமும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

மூன்றாவது காலிறுதிப் போட்டி இன்று இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்றது. இரு அணிகளும் சம பலம் மிக்கவை என்பதால் வெற்றிக்காக கடும் போராட்டம் நடந்தது. ஆட்டத்தின் முதல் கால் நேர பகுதியில், ரஷ்மேர் டேக்ளஸ் அருமையாக டிரிபிள்ஸ் செய்து கொடுத்த பந்தை, வாலஸ் கோலாக மாற்றினார். ஆட்டத்தின் 12ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டாவது கால் நேர பகுதியில் எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. 3 ஆவது கால் நேரத்தின்போது பெனால்டி கார்னர் வாய்ப்பை இங்கிலாந்து வீரர் லியாம் அன்செல் கோலாக மாற்றினார்.

ஆட்டம் முடிவதற்கு 15 நிமிடங்களே இருந்த நிலையில் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ஜெர்மனி வீரர்கள் 2 கோல்களை அடுத்தடுத்து அடித்து சூப்பரான கம்பேக் கொடுத்தனர். ஆட்டநேர முடிவில் 2-2 என இரு அணிகளும் சமநிலையில் இருக்க, வெற்றியை தீர்மானிக்கும் பெனால்டி ஷூட் அவுட்நடத்தப்பட்டது. இதில் 4-3 என்ற கோல்கணக்கில் இங்கிலாந்தை வென்று ஜெர்மனி அரையிறுதிக்கு முன்னேறியது. ஆட்டத்தின் முதல் 45 நிமிடங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த இங்கிலாந்து அணியால் வெற்றியை சுவைக்க முடியாமல் போனது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. தற்போது வரை பெல்ஜியம், ஆஸ்திரேலியா அணிகளைத் தொடர்ந்து ஜெர்மனியும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

First published:

Tags: World Cup Hockey 2023